- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தின் அருள் கிடைக்க தீபம் ஏற்றும் முறை

குலதெய்வத்தின் அருள் கிடைக்க தீபம் ஏற்றும் முறை

- Advertisement -

குலதெய்வ வழிபாடு முதன்மையான வழிப்பாடாக திகழ்கிறது. குலதெய்வத்தை முழுமனதோடு வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் சிறப்புகள் அதிகரிக்கும். மேலும் அந்த குலத்தையே காக்கக்கூடிய தெய்வமாக தான் அந்த குலதெய்வம் விளங்குகிறது என்பதால் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் செய்ய முயற்சிப்பதாக இருந்தாலும் குலதெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட குலதெய்வம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கட்டுண்டு இருந்தால் அந்த கட்டை நீக்கிவிட்டு குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த தெய்வத்தின் அருளை பெறுவதாக இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். ஒரு சிலர் அந்த குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக குலதெய்வத்தை கட்டி விட்டு தீங்கு செய்வார்கள். அந்த சூழ்நிலையில் குலதெய்வ கட்டு ஏற்படும். சில குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தாலும் குலதெய்வ கட்டி என்பது ஏற்படும்.

- Advertisement -

அப்படி ஏற்படும் பட்சத்தில் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியாது. குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சிகளும் வெற்றி அடையாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கட்டை உடைப்பதற்கு உரிய எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு செப்பு சொம்பு வேண்டும். சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் வெண்கடுகு 100 கிராம், நாய்க்கடுகு 100 கிராம், மருதாணி விதை 100 கிராம் இவற்றை அதற்குள் போட வேண்டும். பிறகு பச்சை கற்பூரம் ஒரு பெரிய துண்டாக பார்த்து அதில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக கருப்பு ஏலக்காய் ஒன்பது என்ற எண்ணிக்கையில் அதற்குள் போட வேண்டும்.

- Advertisement -

பிறகு உங்களுடைய குலதெய்வத்திற்காக நீங்கள் எடுத்து வைக்கும் காணிக்கை ஒற்றைப்படையில் 11, 51, 101 என்று உங்களால் இயன்ற அளவு எடுத்து அதையும் அந்த சொம்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு தட்டை மூடி விடுங்கள். அந்த தட்டிற்கு மேல் புதிதாக வாங்கிய அகல் விளக்கை வைத்து அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் மனதார வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் குலதெய்வத்திற்கு உங்கள் மேல் இருந்த கோபம் குறைந்து குலதெய்வம் சாந்தம் ஆவார்கள். 48 நாட்கள் கழித்து இந்த கலசத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் கடலில் விட்டு விட வேண்டும். பிறகு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்தை எந்த முறையில் வழிபட வேண்டுமோ அப்படி வழிபட வேண்டும்.

- Advertisement -

அந்த தெய்வத்தின் பாதத்தில் மூன்று எலுமிச்சம் பழங்களை வைத்து வழிபாடு செய்து திரும்ப வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களில் ஒன்றை பூஜை அறையிலும் ஒன்றை நிலை வாசலிலும் ஒன்றை பணம் வைக்கும் இடத்திலும் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வ கட்டு உடைந்து குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழில், வேலையில் சிறந்து விளங்க வாராகி நாமங்கள்

குலதெய்வ கட்டை உடைப்பதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கிறது. இது நம் வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய எளிமையான தீப வழிப்பாடு. விருப்பம் இருப்பவர்கள் முழுமனதுடன் செய்து குலதெய்வத்தின் அருளை பெறலாம்.

சற்று முன்