- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்துடன் வாழ வாராஹி வழிபாடு

செல்வ வளத்துடன் வாழ வாராஹி வழிபாடு

- Advertisement -

நிலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். மகாகாளியின் மறு அவதாரம் ஆக கூட நாம் வாராகி அம்மனை கூறலாம். அந்த அளவிற்கு உக்கிரமான தெய்வமாக இருந்தாலும் உள் அன்புடன் நாம் அவளை வழிபட்டால் அவள் மனமிறங்கி வந்து நாம் வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய அன்பான தெய்வமாக திகழ்வாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு எந்த பொருளை வைத்து அபிஷேகம் செய்தால் நாம் நினைத்தது போல் நம்மால் வாழ முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வராஹி வழிபாடு

ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக செய்து வழிபடுவோம். அல்லது அந்த தெய்வத்திற்கு பிடித்த பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து மனம் குளிர பார்த்து ரசிப்போம். அல்லது அந்த தெய்வத்திற்கு பிடித்த நிறத்தில் ஆடைகள் வாங்கி அந்த தெய்வத்திற்கு கொடுத்து மகிழ்வோம். இப்படி நாம் எந்த அளவிற்கு அந்த தெய்வத்திற்கு பிடித்த விஷயங்களை செய்து சந்தோஷப்படுகிறோமோ அந்த அளவிற்கு அந்த தெய்வமும் சந்தோஷப்பட்டு நமக்கு மேலும் மேலும் சந்தோஷங்களை தருவாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வராகி அம்மனுக்கு பிடித்தமான பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வாராகி அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவள் நிலத்திற்கு சொந்தமானவள் என்பதால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனை வழிபடலாம். இதோடு மட்டுமல்லாமல் நிலத்திற்குள் இருந்து கிடைக்கக் கூடியதுதான் தங்கம் என்பதால் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் வாராகி அவனை வழிபடலாம். எப்படி வழிபடலாம்? எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்.

அதிலும் குறிப்பாக அவளுக்கு பிடித்தமான முறையில் வழிபடும் பொழுது அதன் பலன்கள் விரைவிலயே கிடைக்கும். என்றைக்கு வழிபடுவது? நம்முடைய விருப்பம் தான் வாராஹி அம்மனுக்கு உகந்த திதியாக திகழ்வது பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதி வரும் நாட்களில் செய்யலாம். சொந்தமாக வீடு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமையன்று செய்யலாம். தங்கம், நகை போன்றவை வாங்க வேண்டும். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை செய்யலாம். இப்படி நாம் எதை எதிர்பார்த்து இருக்கிறோமோ அதற்கு ஏற்ற கிழமைகளில் வாராகி அம்மனை வழிபடுவது சிறப்பு.

- Advertisement -

எப்படி வழிபட வேண்டும்? அந்த அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். எந்த கிழங்காக இருந்தாலும் பரவாயில்லை. அதிலும் குறிப்பாக பனங்கிழங்கு என்பது அந்த அம்மனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அடுத்ததாக வராகி அம்மனுக்கு மாதுளம் பழம் முத்துக்களை வைத்து அபிஷேகம் செய்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. மாதுளம் பழம் முத்துக்கள் மட்டுமல்ல இன்னும் எவ்வளவு கனிகள் இருக்கிறதோ அனைத்து கனிகளையும் பயன்படுத்தி அபிஷேகம் செய்தோம் என்றால் அவள் மனம் குளிர்ந்து நம் வேண்டிய வரத்தை தந்து விடுவாள்.

அடுத்ததாக வராகி அம்மனுக்கு தங்க நிறத்தில் இருக்கக்கூடிய புடவைகளை வாங்கி கொடுத்து சாற்றலாம் அல்லது சிவப்பு நிற புடவைகளை வாங்கி கொடுத்து சாற்றுவதன் மூலமும் வராஹி அம்மனின் மனம் குளிர்ந்து நாம் வேண்டிய வர கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே தலையெழுத்தை மாற்றும் ஆலயம்

மிகவும் எளிமையான வழிமுறைகள் தான் என்றாலும் முழு மனதோடு வாராகி அம்மனின் பாதங்களில் சரணாகதி அடைந்து இந்த வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்