- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

- Advertisement -

முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களே இருக்க முடியாது. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விநாயகப் பெருமானே வழங்கிவிட்டு தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அப்படி செய்யக்கூடிய அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வெற்றிகள் உண்டாகும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகருக்குரிய தினமாக கருதப்படும் சங்கடஹர சதுர்த்தி. அன்று என்ன பரிகாரம் செய்தால் நம்முடைய சங்கடங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய சித்தி உண்டாகவும், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறவும், வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் நீங்கவும் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வோம். அதற்கு மட்டும் தானா? நமக்கு என்னென்ன வேண்டுமோ, என்னென்ன தேவையோ, என்னென்ன பிரச்சினைகளோ அது அனைத்தும் நாம் நினைத்தது போல் நடைபெற வேண்டும் என்றாலும் நாம் விநாயகரை வழிபடலாம்.

- Advertisement -

அவரை நாம் வழிபடும் பொழுது அப்பா பாத்துக்கோ என்று கூறக்கூடாது. எனக்கு இது வேண்டும் அது வேண்டும் இது சரியாக வேண்டும் அது சரியாக வேண்டும் என்று வாய்விட்டு கேட்க வேண்டுமாம். அப்பொழுதுதான் அவருடைய காதுகளில் நம்முடைய வேண்டுதல் போய் சேர்ந்து அவர் நமக்கு அருள் புரிவாராம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகரை நாம் தினமும் வழிபடலாம். இருப்பினும் அவருக்கென்று மிகவும் விஷேச நாளாக திகழக்கூடியதுதான் சங்கடஹர சதுர்த்தி.

அந்த நாளன்று பலரும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் விநாயகருக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு விரதம் இருப்பவர்களுக்கு எந்தவித சங்கடங்களும் ஏற்படாமல் விநாயகப் பெருமான் காத்தருள்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சங்கர சதுர்த்தி நாள் அன்று வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை கண்டிப்பான முறையில் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக மூன்று சங்கடஹர சதுர்த்திகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் போல் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்துவிட்டு உங்களுடைய விரதத்தை நீங்கள் தொடங்குங்கள். பிறகு அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைக்கு சென்று நவதானியம் செட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

மாலை 5 மணி போல இந்த நவதானிய செட்டை ஒரு தாம்பாளத்தில் பரப்பி உங்களுக்கு என்ன வேண்டுமோ என்ன பிரச்சனையோ அதை அந்த நவதானியத்தில் எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்துவிட்டு இதை விநாயகருக்கு முன்பாக வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் விநாயகர் சிலை இருக்கும் பட்சத்தில் அந்த சிலையை எடுத்து இந்த நவதானியங்களின் மேல் வைத்துக் கூட வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

பிறகு உங்களுக்கு தெரிந்த விநாயகரின் மந்திரங்கள், விநாயகர் அகவல், விநாயகர் போற்றி என்று கூறி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அந்த நவதானியங்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று யாருக்காவது அந்த நவதானியத்தை தானமாக தந்து விட வேண்டும். யாரும் அப்படி வாங்க மாட்டார்கள் என்று நினைத்தால் இந்த நவதானியத்தை வேகவைத்து சுண்டலாக மாற்றி பிரசாதமாக கூட தரலாம். இப்படியும் வாங்க மாட்டார்கள் என்று நினைப்பவர்கள் மரங்களுக்கு அடியில் இந்த நவதானியங்களை தூவி விட்டு வர வேண்டும்.

இந்த மூன்று முறைகளில் ஏதாவது ஒரு முறையை பின்பற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று சங்கடகர சதுர்த்திகள் ஒரே பிரச்சினையை ஒரே வேண்டுதலை நவதானியத்தில் எழுதி வைத்து வழிபாடு செய்ய அந்த வேண்டுதல் விரைவிலேயே நடந்திடும்.

இதையும் படிக்கலாமே: கேட்டதை மட்டுமல்ல கேட்காததையும் தரும் முருகர் வழிபாடு

வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்களை தீர்க்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று இந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடம் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்