- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபர்ஸில் வைக்கவே கூடாத பொருள்

பர்ஸில் வைக்கவே கூடாத பொருள்

- Advertisement -

சில பேர் எப்போதுமே பணத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். கோடி கோடியாக பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப செலவுக்கு ஏற்ப 500 1000 என்று பணம் பர்ஸில் இருப்பு இருக்கும். மாத கடைசியாக இருந்தாலும், ஒரு சிலர் கையில் பணம் இல்லை என்ற வார்த்தை வரவே வராது.

அப்படி என்றால் பணத்தை ஈர்ப்பதற்கு ஏதோ ஒரு வழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தான் அர்த்தம். நீங்களும் உங்களுடைய பர்ஸில் நிறைய பணம் காசு தங்க வேண்டும் என்று நினைத்தால், இந்த பயனுள்ள ஆன்மீக குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்கள் பர்ஸில் பணம் காசு நிரந்தரமாக தங்கும். பணம் சேர பர்ஸில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பர்ஸில் வைக்கக் கூடாத பொருட்கள்

முதல்ல உங்க பர்ஸில் அடுத்தவர்களுடைய பொருளை வைக்கக்கூடாது. குறிப்பாக அடுத்தவர்களுடைய லிஸ்டிங் கார்ட் உங்களுடைய பரிசில் இருக்கவே கூடாது. யார் எதைக் கொடுத்தாலும் அதை வாங்கி முதலில் உங்களுடைய பர்ஸில் வைக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள். பணம் வைக்கும் பர்ஸில் அடுத்தவர் கையில் இருந்து பெறப்பட்ட பொருளை உடனடியாக வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இது சில சமயங்களில் நெகட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.

இரண்டாவதாக ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்த பில், பெட்ரோல் போட்ட பில், மல்லிகை பொருட்கள் வாங்கின பில், என்று மூட்டை மூட்டையாக குப்பைகளை பர்ஸில் சேர்க்க வேண்டாம். குறிப்பாக மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த பொருளையும் பர்ஸில் வைக்காதீங்க. சில பேர் கத்தி பிளேடு போன்ற கூர்மையான பொருட்களை கூட பர்ஸில் வைத்திருப்பார்கள் அதை பர்ஸில் வைக்காமல் இருப்பது நல்லது.

- Advertisement -

மூன்றாவதாக, சில பேர் பர்ஸில் வெறும் ஏடிஎம் கார்டு மட்டும்தான் இருக்கும். ஒரு ரூபாய் கூட பணம் இருக்காது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு இருந்தாலும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இருக்கும் பணத்தை மடித்து சுருட்டி பர்ஸில் ஒரு மூலையில் சொருகி வைக்கக் கூடாது. பணம் நன்றாக விரிந்தபடி அப்படியே நேராக பர்ஸுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பணத்தை மடிக்காமல் பர்ஸுக்குள் வைக்கும் படி, வசதியான பர்ஸ் ஆக பார்த்து வாங்கிக் கொள்ளவும்.

ஆண்கள் பெண்கள் இருவருக்குமே மேலே சொன்ன விஷயங்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பர்ஸ் வாசமாக இருக்க சின்ன துண்டு பச்சை கற்பூரம், ஏலக்காய் அல்லது பிரியாணி இலை போன்ற பொருட்களை பர்ஸில் வைப்பது நல்லது. இதில் எல்லா பொருட்களையும் மொத்தமாக எடுத்து போட்டு பரிஸை குப்பையாக மாற்றக்கூடாது.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க முருகரை எந்த கிழமையில் வழிபாடு செய்யணும்.

இதிலிருந்து ஏதாவது ஒரு பொருளை போடுங்கள். ஒவ்வொரு வாரம் கழித்து பழைய பொருளை எடுத்து வெளியே போட்டுவிட்டு, வேறொரு பொருளை மாற்றி வைக்கலாம் தவறு கிடையாது. பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் துளசி இலைகளை பர்சுக்குள் வைக்கலாம். மூன்று நாட்களில் அந்த பழைய துளசி இலைகளையும் எடுத்து கீழே போட்டு விட வேண்டும். பணம் காசு சேர பர்ஸில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு நம்பிக்கை தரும்படி அமைந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்