- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநன்மைகள் ஏற்பட விநாயகர் வழிபாடு

நன்மைகள் ஏற்பட விநாயகர் வழிபாடு

- Advertisement -

முழு முதல் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்று அனைவருக்கும் தெரியும். தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் பெருமானை வழிபட வேண்டும். காரிய சித்திக்கு உகந்த தெய்வமாக கருதப்படுபவர் விநாயகப் பெருமான். இவை அனைத்துமே பலரும் அறிந்தது தான். ஒரு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அல்லது சுப நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக விநாயகர் பெருமானை வழிபட்டு விட்டு செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த காரியத்தில் வெற்றியும் பெறுவார்கள். இப்படி காரியங்கள் நடக்கும் பொழுது மட்டும் விநாயகர் பெருமானை வழிபடாமல் தொடர்ச்சியாக விநாயகப் பெருமானை வழிபட்டோம் என்றால் நாம் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களும் நல்லவிதமாகவே நடைபெறும். அப்படிப்பட்ட வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

நன்மைகள் ஏற்பட விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை நாம் பல வடிவங்களில் பல விதங்களில் வழிபடுவது உண்டு. போற போக்கில் இருக்கக்கூடிய விநாயகருக்கு பிள்ளையாரப்பா காப்பாத்து என்று சொன்னாலும் அவர் காப்பாற்றுவார் அல்லது அவரிடம் சென்று அவரை வணங்கி தலையில் கொட்டு போட்டு தோப்புக்கரணம் போட்டு அவரை சுற்றி வந்து வழிபட்டாலும் அவர் காப்பாற்றுவார். இருந்தாலும் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்னும் பட்சத்தில் அதற்குரிய வழிபாட்டை நாம் மேற்கொள்வது தான் சிறப்பு.

- Advertisement -

வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் சரியான நேரத்தில் நடக்கவும் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் விநாயகரை நாம் வீட்டிலேயே வழிபட வேண்டும். தினமும் வழிப்படுவது என்பது மிகவும் சிறப்பு. தினமும் வழிப்பட இயலாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். எப்படி வழிபட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மங்களங்கள் அனைத்தையும் தரக்கூடியவராக திகழக்கூடியவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை நம் மஞ்சளில் பிடித்து வைத்து வழிப்பட்டால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது. இந்த மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதிலும் குறிப்பாக புதன் அல்லது வியாழன் இந்த இரண்டு கிழமைகளில் நாம் செய்யும் பொழுது அதற்குரிய பலன் என்பது நமக்கு அதிகமாக கிடைக்கும்.

- Advertisement -

காலையிலேயே மஞ்சளை எடுத்து அதில் பன்னீர் ஊற்றி சிறிது பச்சை கற்பூரம் சிறிது ஜவ்வாது பொடி சேர்த்து பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த பிள்ளையாரை வெறும் தரையில் வைக்கக்கூடாது. வெற்றிலை, அரசு இலை போன்று இலைகளில் ஏதாவது ஒரு இலையில் தான் வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சிறிது அருகம்புல்லை எடுத்து அவருக்கு முன்பாக அவரது பாதங்களில் வைத்துவிட்டு மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரிந்த விநாயகரின் மந்திரத்தை உங்களுடைய நேரத்திற்கு ஏற்றவாறு மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். அடுத்த வாரம் பழைய மஞ்சள் பிள்ளையாரை எடுத்து அதில் மறுபடியும் சிறிது தண்ணீரோ அல்லது பன்னிரோ கலந்து அந்த மஞ்சளையும், அருகம்புல்லையும் சேர்த்து உங்கள் வீட்டு நிலை வாசலின் மேல் பகுதியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அன்றைய தினம் புதிதாக மறுபடியும் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமான் நம்முடைய வீட்டிற்கு பாதுகாவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவித தீய சக்திகளும் அண்டாமல் நம்மை காப்பாற்றுவார். நமக்கு நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வெண்கடுகு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த மஞ்சள் பிள்ளையாரின் வழிபாட்டில் இருக்கக்கூடிய மகத்துவத்தை உணர்ந்து நாமும் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிலேயே மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்