எந்த ஒரு வேலையை நாம் செய்வதாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு ரூபத்தில் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி அனுமதி வாங்குவதற்காக நாம் பலமுறை அரசு அலுவலகம் சென்றாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரிய பகவானுக்குரிய எந்த பரிகாரத்தை செய்தால் அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரசு வேலை கிடைக்க பரிஹாரம்
அரசாங்கம் தொடர்பான செயல்கள் என்பது பலரது வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. குறிப்பாக ஒரு வீட்டு கட்டுவதற்காக அனுமதி பெறுவதாக இருந்தாலும் சரி தண்ணீர் வரிக்காக மனு கொடுத்திருந்தாலும் சரி அல்லது சொத்து வரி வீட்டு வரி போன்ற ஏதாவது ஒரு விஷயத்திற்காக மனு கொடுத்து அந்த மனுவை பரிசீலித்து நமக்கு தேவையானவற்றை அரசாங்கம் நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்பவர்களாக இருந்தாலும் சரி அரசு வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர் ஆக இருந்தாலும் சரி அரசாங்கம் தொடர்பான அனைத்து செயல்களிலும் வெற்றிகள் என்பது அவ்வளவு சுலபம் கிடைக்காது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நம்முடைய கிரக சூழ்நிலையும் ஒருவித காரணமாகவே அமைகிறது. யாரொருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் நன்றாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அரசாங்கம் தொடர்பான அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. காரணம் சூரிய பகவான் தான் அரசாங்கம் தொடர்பான அனைத்து செயலுக்கும் காரணமாக திகழ்கிறார்.
அப்படிப்பட்ட சூரிய பகவான் நம்முடைய ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலோ கெட்ட கிரகங்களின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அரசாங்கம் தொடர்பான எந்த வேலையிலும் நமக்கு நம்மால் ஈடுபட முடியாது அப்படியே ஈடுபட்டாலும் அதில் நமக்கு வெற்றிகள் கிடைக்காது அப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரிய பகவானுக்கு ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம்மால் அரசாங்கம் தொடர்பான அனைத்து வேலைகளையும் வெற்றியை பெற முடியும்.
சூரிய பகவான் இல்லாமல் இந்த உலகத்தால் இயங்க முடியாது என்பது பலரும் அறிந்ததே. காலையில் எப்பொழுதுமே சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாகவே எழுந்து கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சூரிய பகவான் உதயமாகும் பொழுது சூரிய பகவானை வணங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் சூரியபகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதாக இருந்தாலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் ஏற்படும் என்று அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.
சூரிய பகவானை சாந்தி செய்வதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. சூரியபகவானுக்குரிய தானியமான கோதுமையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் பல இருக்கின்றன. இருப்பினும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூச்சுமமான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு சுத்தமான குங்குமப்பூ தேவைப்படும்.
இந்த குங்குமப்பூவை எடுத்து சிறிதளவு பன்னீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த பன்னீரானது குங்குமப்பூ நிறத்திற்கு மாறிவிடும். என்றைக்கு நாம் அரசாங்கம் தொடர்பான வேலையை செய்யப் போகிறோமோ அன்றைய நாள் இதை எடுத்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டும்.
மேலும் அன்றைய தினம் சூரிய வழிபாடு என்பதை கண்டிப்பாக செய்ய வேண்டும். வீட்டிலேயே காலையில் சூரியன் உதயமாகும் போது சூரிய பகவானை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபாடு செய்ய இயலாதவர்கள் இந்த அரசு தொடர்பான வேலை செய்வதற்காக செல்லும் பொழுது அருகில் இருக்கக்கூடிய சிவன் ஆலயங்களில் இருக்கும் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டுப் சென்றாலும் அவர்களுக்கு சூரிய பகவானின் அருளால் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு சூரிய பகவானின் அருளால் அரசாங்கம் தொடர்பான அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடைபெறும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.