பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான தோற்றம் அளித்தாலும் குழந்தை உள்ளம் கொண்டவராக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானே அனைத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக் கூடியவர். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அவரை வணங்கி பிறகு செய்ய காரிய வெற்றி உண்டாகும் என்பது பலரும் அனுபவபூர்வமாக அறிந்த உண்மையே. மேலும் அவரை நினைத்து நாம் எந்த வேண்டுதலை வைத்து வழிபாடு செய்தாலும் அந்த வேண்டுதல் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை நல்ல முடிவு எடுப்பதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த
ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பிரச்சினைகள் தீர வழிபாடு
விநாயகப் பெருமானுக்குரிய வழிபாடுகள் பல இருக்கின்றன. அவருக்கு விசேஷமான நாட்களாக கருதப்படக்கூடிய சதுர்த்தி தினத்தன்றும் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற கிழமைகளிலும் விநாயகர் பெருமானை பலரும் வழிபட்டு வருவார்கள். அதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலர் அனுதினமும் அரச மரத்தடியில் இருக்கக் கூடிய விநாயகரை வலம் வந்து வேண்டிய வரங்களை பெறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனைக்குரிய தீர்வை நாம் கண்டறிந்து அதை சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி நாம் முயற்சி செய்தும் அதற்குரிய தீர்வு நமக்கு கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற ஒரு யோசனையே வரவில்லை என்று இருப்பவர்கள் விநாயகப் பெருமானை சரணாகதி அடைந்து அந்த பிரச்சினை தீர்வதற்குரிய வழியை வேண்டும் பொழுது விநாயகர் பெருமான் அதை அருவார். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை நாளை அதாவது 07-07-2024-ஆம் நாள் அன்று ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளில் தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொண்டு செல்லலாம். முடிந்த அளவிற்கு அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.
இப்பொழுது விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த தேங்காயை வாங்கி கையில் வைத்துக் கொண்டு விநாயகரின் ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும்பொழுது உங்களுடைய பிரச்சினைகள் என்ன? எந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மனதார விநாயகப் பெருமானிடம் கூற வேண்டும்.
இப்படி கூறி முடித்துவிட்டு மூன்று சுற்றுகள் சுற்றிய பிறகு அந்த தேங்காயை கோவிலிலேயே உடைத்து விட்டு வீட்டிற்கு வர வேண்டும். இவ்வாறு நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும். வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே நல்ல யோசனை வரும்.
இதையும் படிக்கலாமே:தீய சக்திகளை விரட்டியடிக்கும் எலுமிச்சை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நாளைய தினம் விநாயகப் பெருமான் மீது முழு நம்பிக்கை வைத்து செய்து தீர்க்க முடியாத பிரச்சினைக்குரிய தீர்வை கண்டறிந்து நிம்மதியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.