ருணம் என்றால் கடன் என்று அர்த்தம். கடன் என்றதும் நம் நினைவிற்கு வருவது நாம் கொடுத்த கடனும் வாங்கிய கடனும்தான். இதை தவிர்த்து பல கடன்கள் இருக்கின்றன. இந்த பிறவியே ஒரு கடன் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைக்கு ஏற்றார் போல் தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறப்பே எடுத்திருக்கிறோம். அதனால் இந்த பிறவியும் ஒரு கடன் தான்.
நம்முடைய வாழ்க்கையில் பல இடங்களில் பல ரீதியான கடன்களை நாம் பார்த்திருப்போம். நன்றி கடன், நேர்த்திக்கடன் என்று நாம் சொல்லிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட எந்த கடனாக இருந்தாலும் அந்த கடன் தீரவும் அந்த கடனால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கவும் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் என்றதும் நாம் அனைவரும் நினைப்பது முருகப்பெருமானை தான். ஏனென்றால் கடனுக்கு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அதனால் கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை சென்று வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதை தவிர்த்து கடன் தீர வேண்டும் என்பதற்காக காலபைரவரை வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
தங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் அந்த தெய்வத்திடம் கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து வழிபாடு செய்வதும் உண்டு. இப்படி கடன் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பல தெய்வங்களை வழிபடுவார்கள் அந்த தெய்வங்களுள் மிகவும் முக்கியமான அதே சமயம் மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் தலைசிறந்த தெய்வமாக திகழக் கூடியவர் தான் சிவபெருமான்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தானே முருகப்பெருமான் தோன்றினார். அடுத்ததாக நாம் வழிபடக்கூடிய தெய்வம் காலபைரவர். இவர் சிவபெருமானின் அம்சம். ஆக கடன் தீர வேண்டும் என்பதற்காக எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வங்கள் சிவபெருமானிடம் இருந்து தோன்றிய தெய்வங்கள் என்பதால் கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானையே வழிபடலாம்.
அப்படி சிவபெருமானை வழிபடுபவர்கள் எந்த ஆலயத்திற்கு சென்றால் சிறப்பு திருவண்ணாமலைக்கு செல்வது மிகவும் சிறப்பு. காரணம் அந்த திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கக் கூடிய அனைத்து லிங்கங்கள் தான். ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. பொதுவாக திருவண்ணாமலை என்றதும் பௌர்ணமி தான் ஞாபகத்திற்கு வரும்.
அடுத்ததாக கார்த்திகை தீபம் ஞாபகத்துக்கு வரும். கார்த்திகை தீபம் என்பது தீபம் ஏற்றுவதற்காக. பௌர்ணமி என்பது கிரிவலம் வருவதற்காக இந்த கார்த்திகை தீபமும் பௌர்ணமி தினத்தில் தான் வருகிறது. அனைத்தும் சேர்ந்து ஒரே இடத்தில் தான் வந்து நிற்கிறது. திருவண்ணாமலைக்கு நாம் சாதாரணமாக செல்லக்கூடாது.
செவ்வாய்க்கிழமை அன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து சிவபெருமானை நாம் வழிபட வேண்டும். இரவோ, பகலிலோ அது உங்களுடைய விருப்பம். ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களும் நீங்கி சிவபெருமானின் அருளை பெறுவதோடு பிறவா நிலையையும் அடைவார்கள். தங்களால் இயன்ற அளவு எத்தனை செவ்வாய்க்கிழமை வேண்டுமானாலும் செல்லலாம்.
இதையும் படிக்கலாமே: வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்
நம்பிக்கையுடன் சிவபெருமானை முழு மனதுடன் நம்பி செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் செல்பவர் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.