- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த 8 பொருட்கள் ஒன்றாக இருக்கும் வீட்டில் பஞ்சம் நீங்கும்.

இந்த 8 பொருட்கள் ஒன்றாக இருக்கும் வீட்டில் பஞ்சம் நீங்கும்.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு நிறைய பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம். சிறுக சிறுக சேமிப்பையும் செய்யவோம். வீட்டில் பணத்தை வைத்தாலும் சரி, அல்லது வங்கியில் பணத்தை சேமித்து வைத்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அந்த பணம் சேராது.

அதாவது நம்முடைய வருமானத்திற்கு, நம்முடைய தகுதிக்கு 2 லட்ச ரூபாய் சேர்த்து விட்டோம். அதற்கு மேலே 10 ரூபாய் சேர்ப்பதாக இருந்தாலும் சிரமம் இருக்கும். அதுவே அந்த 2 லட்சம் ரூபாய்க்கு ஏதோ ஒரு செலவு காத்துக் கொண்டிருக்கிறது. அந்த பணம் செலவாகிவிட்டால் மீண்டும், நாம் பணம் சேமிக்க தொடங்கி விடுவோம்.

- Advertisement -

கொஞ்சம் சேமிப்பு நம் கையில் இருக்கும் போது, ஏன் நம்மால் மீண்டும் அதற்கு மேலே பணத்தை சேமிக்க முடியவில்லை. சற்று இதை அறிவுபூர்வமாக சிந்தித்து பார்த்தால், கொஞ்சம் சேமிப்பு நம் கையில் இருக்கிறது என்ற தைரியத்தில், கொஞ்சம் தாராளமாக பணத்தை செலவு செய்வோம். சேர்த்து வைப்பதற்கான அவசியத்தை கொடுக்க மாட்டோம்.

கையில் இருக்கும் பண சேமிப்பு கரைந்த உடன், ஐயையோ, கையில் இருப்பு குறைகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டும் என்று செலவுகளை கட்டுப்படுத்துவோம். இது நம்முடைய மனது சம்பந்தப்பட்ட விஷயம். இன்னொரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் ஏதோ ஒரு அடைப்பு நம்மிடம் இருக்கிறது. அந்த அடைப்பை திறந்து விட்டால் போதும் பணம் மேலும் மேலும் சேர தொடங்கி விடும். அந்த அடைப்பை நீக்குவதற்கு உண்டான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

பணம் சேர வீட்டில் வைக்க வேண்டிய 8 பொருள்

இந்த பண தடையை நீக்கக்கூடிய அதி அற்புதமான சக்தி இந்த 8 பொருளுக்கு இருக்கிறது. ஒரு வெள்ளிக்கிழமையோ பௌர்ணமி நாளிலோ இந்த 8 பொருளை ஒன்றாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியில் இந்த எட்டு பொருட்களையும் வைத்து முடித்தாக கட்டி, பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம்.

எட்டு பொருளையும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்க வேண்டும். தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுவத்தி மட்டும் காண்பியுங்கள். அது போதும் உங்களுடைய வீட்டில் பணத்தை சேர்ப்பதற்கு உண்டான தடை விலகும். அந்த எட்டு பொருட்கள் என்னென்ன.

- Advertisement -

வெட்டிவேர், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் தூள், கோரோசனை பொடி, அகில் கட்டை, திரவிய பட்டை, ஜாதிபத்திரி, ஜவ்வாது. இதுதான் எட்டு பொருட்களும். இது நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வத்தை நினைத்து இந்த மூட்டையை கட்டி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: உப்பை எப்படி வாங்கணும்? எப்படி வாங்க கூடாது?

இதில் இருக்கும் வாசனை நீங்கியவுடன் பழைய பொருட்களை எல்லாம் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புது பொருளை வைக்கலாம். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரங்களில் நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்