- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉப்பை எப்படி வாங்கணும்? எப்படி வாங்க கூடாது?

உப்பை எப்படி வாங்கணும்? எப்படி வாங்க கூடாது?

- Advertisement -

உப்பு என்பது மகாலட்சுமி அம்சம் கொண்டது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதேபோல இந்த உப்பை கையில் வைத்துக்கொண்டு, நாம் என்ன பிராத்தனை செய்கின்றோமோ, அது அப்படியே பலிக்கும் என்பதும் நமக்குத் தெரியும். கண் திருஷ்டியை கழிக்க கூடிய பொருள் உப்பு.

இந்த உப்பை பற்றி நாம் அறியாத சில புத்தம் புது ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே நல்ல நாளில் கல் உப்பு வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இப்படி நல்ல நாளில் கல்லுப்பு வாங்கினால் நமக்கு நன்மை நடக்கும். ஆனால் உப்பை எந்த நாளில் எல்லாம் வாங்க கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?

- Advertisement -

உப்பை எப்போதெல்லாம் வாங்க கூடாது

பெண்கள் தீட்டான சமயத்தில், அவர்கள் கையால் புதுசாக உப்பு வாங்கி கொண்டு வந்து, ஜாடியில் கொட்ட கூடாது. தீட்டு வீட்டிற்கு சென்று வரும் வழியில் உப்பு வாங்க கூடாது. கடன் வாங்க போறீங்க, வட்டி கட்ட போறீங்க, நகையை அடமானம் வைக்க போறீங்க, வீடு திரும்பும் போது உப்பு வாங்க கூடாது. இப்படி ஏதாவது உங்களுக்கு கஷ்டம் தரக்கூடிய வகையில் இருக்கும் செயல்களை செய்துவிட்டு வீடு திரும்பும் போது உங்கள் கையோடு உப்பை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு, வந்து அந்த உப்பைக் கொண்டு சமைத்து சாப்பிட்டால் அந்த கஷ்டம் உங்களை பின் தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நிறைய பேர் இதை எந்த அளவுக்கு நம்புவீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது முற்றிலும் உண்மை. உங்களுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை உப்புவாங்க அனுப்பக்கூடாது. நம் வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்கள் கையால் உப்பு வாங்கி, அதை நம் வீட்டு ஜாடியில் கொட்டி வைக்கக் கூடாது. ஒரு வீட்டின் குடும்ப தலைவனோ தலைவியோ அந்த வீட்டுப் பிள்ளைகளோ தான் உப்பை வாங்கி வர வேண்டும். அவர்களுடைய கையாலேயே தான் உப்பை பிரித்து அவர்கள் வீட்டு உப்பு ஜாடியில் கொட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருவேளை உங்க சொந்த பந்தங்கள், தெரிஞ்சவங்க, நண்பர்கள் யார் கையிலாவது உப்பை வாங்கி வந்து அதை உங்கள் கையில் கொடுத்தால், அந்த உறவு, அந்த நட்பு நீடித்து நிலைக்காது. அந்த உறவுகளோடு உங்களுக்குள் சண்டை வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. உங்க மகன் வீட்டுக்கு, மகள் வீட்டுக்கு, உறவுகள் வீட்டிற்கு தெரிந்தவர்கள் வீட்டிற்கு உங்கள் கையால் உப்பு வாங்கிக்கொண்டு செல்லாதீர்கள்.

உப்பு என்பது சால்டாக இருந்தாலும் சரி, கல் உப்பாக இருந்தாலும் சரி இரண்டுக்குமே மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையும் பொருந்தும். நல்ல காரியத்துக்கு போறீங்க நல்ல விஷயங்கள் செய்யப் போறீங்க அப்படின்னா அந்த சமயத்தில் நீங்கள் கல் உப்பு வாங்கலாம். தவிர உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் எந்த செயல் நடந்தாலும் அந்த சமயத்தில் போகும் வழியில் அப்படியே உப்பை வாங்கி வீட்டுக்கு செல்லலாம் என்ற முடிவுக்கு மட்டும் வரவே வராதீங்க.

- Advertisement -

வீட்டுப் பெண்கள் வீட்டு விலக்கு ஆகி இருக்கும்போது, அதாவது மாதவிலக்கான சமயத்தில் வீட்டில் இருக்கும் உப்பு ஜாடியை தொடாமல் இருப்பது நல்லது. பிறகு எப்படி சமைப்பது என்ற கேள்வியை எழுப்பலாம். இதுபோல தீட்டு காலங்களில் இருக்கும் சமயத்தில் மட்டும் தனியாக ஒரு டப்பாவில் உப்பை கொட்டி வைத்து அதை சமையலுக்கு பயன்படுத்தவும். பெரும்பாலான பெண்களுக்கு இது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.

ஆனால் வீட்டில் மகாலட்சுமி அம்சம் நிலையாக இருக்க வேண்டும் என்றால் தீட்டு சமயத்தில் உங்கள் வீட்டு கல்லுப்பு ஜாடையை தொடாமல் இருப்பது நல்லது. வெறும் மாதவிலக்கு தீட்டிற்கு மட்டும் கிடையாது, பெண்கள் ருதுவான தீட்டு, இறந்த தீட்டு, பிறப்பு தீட்டு, கணவன் மனைவி ஒன்றாக இருந்த தீட்டு, என்று எந்த தீட்டா இருந்தாலும் சரி நீங்கள் குளிக்காமல் அப்படியே போய் அந்த உப்பு ஜாடியை தொட்டீர்கள் என்றால் உங்களை கஷ்டம் தொடரும் என்பதும் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: வளமாக வாழ வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

உப்பு என்பது சாதாரண பொருள் கிடையாது நம்முடைய எண்ணங்கள் நம்முடைய செயல்பாடுகள் எல்லாவற்றையும் மீண்டும் நமக்கு பிரதிபலிக்கக் கூடிய ஒரு பொருள். ஆகவே அதை எப்போதும் சாதாரணமாக நினைத்து கையாள வேண்டாம். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்

சற்று முன்