நாளை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து ஆனி மாதத்தின் கடைசி நாள் வருகின்றது. அதாவது தமிழ் மாத முடிவு, இந்த ஆனி மாதத்தின் கடைசி நாளில் கண் திருஷ்டி விலக நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றியும், இதோடு சேர்த்து ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில், நம் வீட்டுக்கு குலதெய்வத்தையும் அம்பாளையும் வரவேற்கும் வகையில் நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கண் திருஷ்டி விலக பரிகாரம்
செவ்வாய்க்கிழமை கண்திருஷ்டி கழிப்பதற்கு உகந்த நாள். இந்த மாதம் முடியும் போது உங்களுடைய கண் திருஷ்டியும் இந்த மாதத்தோடு முடிந்து போகட்டும். துர்க்கை அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கைப்பிடி கல்லுப்பு, ஒரு கைப்பிடி கடுகு, மூன்று வர மிளகாய், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளைத்துணியில் வைத்து முடிச்சாக கட்டி எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த மூன்று பொருளையும் அப்படியே இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, உங்களை பிடித்த கண்திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாம் விலக வேண்டும் என்று துர்கை அம்பாளை பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
வீட்டிற்கு வெளியே செல்லுங்கள். இந்த முடிச்சுக்கு மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து அப்படியே நெருப்பு மூட்டிவிடுங்கள். உங்கள் குடும்பத்தை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் எப்படி நெருப்பில் வெடித்து சிதறுகிறதோ, அதேபோல உங்கள் குடும்பத்தை பிடித்த கஷ்டமும் வெடித்து சிதறும்.
இந்த பரிகாரத்தை செய்தவுடன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் முகம் கை கால்களை கழுவி விட்டு தூங்கச் செல்லலாம். செவ்வாய்க்கிழமை இரவே ஒரு சுத்தமான பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கொத்து வேப்ப இலையை போடுங்கள். ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போடுங்கள்.
பச்சைக் கற்பூரம் இருந்தால் அதையும் நுணுக்கி அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். இந்த பாத்திரத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் நாமத்தை 3 முறை சொல்லவும். சின்ன சொம்பு தண்ணீர் எடுத்தால் போதும். அந்தத் தண்ணீர் பக்கத்தில் உங்கள் வாயை எடுத்துச் சென்று குலதெய்வத்தை நாமத்தை சொல்லுங்கள் அந்த குலதெய்வத்தின் சக்தியை அந்த தண்ணீர் தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும். குலதெய்வத்தின் நாமத்தைச் சொல்லிவிட்டு இந்த சொம்பு தண்ணீரை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.
நாளை மறுதினம், அதாவது புதன்கிழமை 17.7.2024 ஆம் தேதி ஆடி 1 ஆம் தேதி பிறக்கவிருக்கின்றது. அதை நாம் வரவேற்க வேண்டும் அல்லவா. புதன்கிழமை வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் வாசல் தெளித்து கோலம் போடுவீர்கள். அந்த வாசல் தெளிக்கும் தண்ணீரோடு நீங்கள் பூஜையறையில் கலந்து வைத்திருக்கும் இந்த தண்ணீரையும் ஊற்றி கலந்து நிலை வாசலை தெளித்து, கோலம் போடுங்கள்.
பிறகு வாசலில் வேப்ப இலையைக் கட்டி அம்பாளை வீட்டிற்குள் வர வைத்துக் கொள்ளுங்கள். ஆடி 1 ஆம் தேதி மனநிறைவோடு இந்த பரிகாரத்தை செய்து அம்பாளை நீங்கள் வீட்டிற்குள் அழைத்தால் அம்பாள் மறுப்பு தெரிவிக்காமல் உங்கள் வீட்டிற்கு வந்து, ஆரோக்கியத்தையும், அளவில்லா செல்வ வளத்தையும் கொடுக்கச் செய்வாள்.
நாளைய தினம் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் மஞ்சள் நிற புடவை உடுத்தி வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு பிரார்த்தனை செய்தால் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்பது நம்பிக்கை. எல்லோர் ஊரிலும் கிராம தேவி, கிராமத்தை காக்கும் அம்பாள் இருப்பாள்.
இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
அந்த கிராம தேவியை கட்டாயம் நீங்கள் ஆடி மாதத்தில் வழிபடுவது சிறப்பான பலனை தரும். அதிலும் ஆடி ஒன்றாம் தேதி நீங்கள் அந்த அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு அம்மனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். மனநிறைவு ஏற்படும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.