ஒரு மாதத்தின் தொடக்கம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல்தான் ஒரு மாதத்தின் முடிவு என்பது முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஏனென்றால் முடிவில் இருந்த தான் தொடக்கம் என்பது ஒன்று தொடங்கும். அதனால் அடுத்த மாதம் பிறக்கிறது என்றால் அதற்கு முதல் நாள் இந்த மாதத்தின் கடைசி நாளில் சில வழிமுறைகளை நாம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த மாத பிறப்பானது சிறப்பாக இருக்கும். அந்த முறையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆடி மாதம் சிறப்பாக இருப்பதற்கு ஆனி மாத கடைசி நாள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது. அந்த ஆடி மாதமானது புதன்கிழமை ஜூலை 17ஆம் தேதி பிறக்கிறது. அதனால் அதற்கு முந்தைய தினமான நாளைய தினம் ஜூலை 16ஆம் தேதி வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை நாம் மாலை நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் மாலையில் வீட்டு வாசலை பெருக்கி மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பிறகு நினைவாசலின் இரண்டு புறங்களிலும் ஒரு தட்டை வைத்து அதில் வெற்றிலை அல்லது செம்பருத்தி இவை இரண்டில் ஏதாவது ஒரு இலையை வைத்து அதற்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
அடுத்ததாக சமையலறைக்கு வந்து அடுப்பை சுத்தம் செய்து அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக பூஜை அறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு பெரிய தாம்பாள தட்டை வைத்து அதில் நம்முடைய கைகள் இரண்டும் நிறைந்த அளவிற்கு மூன்று கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு பரப்பிக் கொள்ள வேண்டும்.
அதற்கு மேலே இரண்டு அச்சுவெல்லத்தை வாங்கி வைத்து அந்த அச்சு வெல்லத்தின் நடுவில் இருக்கும் குழியில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு உங்களுக்கு தெரிந்த அம்மனின் 108 போற்றிகளை கூறி அம்மனை மனதார வழிபட வேண்டும். இப்படி நாளைய தினம் வழிபடுவதன் மூலம் ஆடி மாத பிறப்பானது மிகவும் சிறப்பான ஒன்றாக திகழ்வதோடு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மனுக்கு மிகவும் பிடித்தமான இந்த பச்சரிசி வெல்லத்தை மறுநாள் அதாவது ஆடி ஒன்னாம் தேதி எடுத்து பொங்கல் வைத்து நெய்வேத்தியமாக படைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே கடன் தீர்க்கும் கந்தன் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை நாளைய தினம் மேற்கொள்பவர்களுக்கு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நினைத்தது நடக்கும்.