மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இன்று கிடைக்கும். உங்களால் முடிந்தால் இன்று இயலாதவர்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு புதுசாக ஏதாவது கற்றுத் தர வேண்டும் என்றால், இன்று பிள்ளையார் சுழி போடலாம். எதிர்காலத்தில் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். கொஞ்சம் அசதி இருக்கும். இருந்தாலும் உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் நிச்சயம் நடக்கும். இன்று பொறுமை காப்பது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நீங்கள் இன்று துவங்கக்கூடிய நல்ல விஷயங்கள், எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுமூகமான சூழ்நிலை நிலவும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனதிற்கு இதமான அனுபவங்கள் கிடைக்கும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். ஏதாவது புது விஷயங்கள் துவங்க வேண்டும் என்றால் இன்று தாராளமாக நீங்கள் துவங்கலாம். நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சாதனை படைப்பீர்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். பெண் பிள்ளைகளுக்கு இன்று மிக அற்புதமான நாளாக இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். இந்த நாளில் மேற்கொள்ளும் புது முயற்சிகள், பல மடங்கு அபரிவிதமான வெற்றியைத் தரும். நல்லது மட்டுமே இன்று நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் மன நிம்மதி கிடைக்கும். காரிய தடை விலகும். கடன் சுமை குறையும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் மனநிறைவை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய விடாமல், சில பேர் பிரச்சனை கொடுப்பார்கள். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்ல வேண்டாம். உங்களுடைய வேலை மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பிரச்சினை தருபவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கி விடுங்கள், அவ்வளவுதான்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகள் வெற்றி தரும். இறைவனின் இறை அருளால் குடும்பத்தில் எந்த குறையும் இருக்காது. சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். காரிய தடை விலகும் நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முகத்தில் தெளிவு பிறக்கும். மனதில் தெளிவு பிறக்கும். வசீகரத் தோற்றத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பகை விலகும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.