ஆடி மாதம் என்றாலே அது அந்த அம்பாளுக்கு உரியது. சாட்சாத் அந்த மகாலட்சுமிக்கு உரிய மாதம் என்று கூட சொல்லலாம். அந்த மகாலட்சுமிக்கு உரிய, ஆடி மாத தொடக்க நாளில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியின் கையால் இந்த இரண்டு பொருட்களை புதுசாக வாங்கும் போது, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைவாக தங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாளைய தினம் ஆடி ஒன்றோடு சேர்த்து வளர்பிறை ஏகாதசி திதியும் இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய வீட்டில் செல்வக் கடாட்சம் அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ஆடி ஒன்றாம் தேதி வாங்க வேண்டிய பொருள்
நாளைய தினம் அந்த அம்பாளுக்கு உரிய பொருளான சிவப்பு நிற கண்ணாடி வலையல், சிவப்பு நிற குங்குமம் இந்த இரண்டு பொருட்களையும் புதுசாக வாங்கி வர வேண்டும். நாளை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, கடைக்கு சென்று பணம் கொடுத்து இந்த இரண்டு பொருளை வாங்கி வாருங்கள்.
மாலையில் கூட பூஜையறையில் விளக்கு ஏற்றி இந்த இரண்டு பொருட்களையும் மகாலட்சுமி தயாரிக்கும் முன்பாக வைத்து சின்னதாக பூஜை செய்ய வேண்டும். நாளைய தினம் அம்பாளுக்கு தேங்காய் பால் சேர்த்த பாயாசம் நெய் வைத்தியம் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை தரும்.
முடிந்தால் அந்த பாயாசத்தை செய்து வைத்து, வாங்கி வந்த புது பொருட்களை அம்பாளுக்கு முன்பாக வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு வாங்கி வந்த சிவப்பு வளையல்களை வீட்டில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் அணிந்து கொள்ளலாம். குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களுக்கு வசதி இருந்தால் இன்னும் கூடுதலாக இரண்டு டெஜன் வளையல் வாங்கி அந்த வளையலையும் பூஜையில் வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்து விட்டு, அந்த வளையலை இரண்டு பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம். பெண் குழந்தைகளுக்கு சின்ன வளையல்கள் வாங்கி தானம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
நாளைய தினம் ஏகாதசி திதி இருக்கிறது. செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் நீங்கள் துளசி இலைகளை வாங்க வேண்டும். வாங்கிய துளசி இலைகளை வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு போட வேண்டும். பச்சைக் கற்பூரம் வாங்க வேண்டும். கல் உப்பு வாங்க வேண்டும். இது மூன்றுமே மகாலட்சுமி அம்சம் பொருந்தியது. பச்சைக் கற்பூரம் துளசி இலைகளும் பெருமாளுக்கு உரியது.
இந்த பொருட்களை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்யும் பட்சத்தில் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் குறைந்து செல்வ வளம் அதிகரிக்கும். எல்லா நாளுக்குமே ஒரு சிறப்பு உண்டு. இப்படி விசேஷங்கள் வரக்கூடிய நாளுக்கு அந்த சிறப்பு இன்னும் கொஞ்சம் கூடும்.
இப்படிப்பட்ட நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் நாளில் சில நல்ல விஷயங்களை நாம் பின்பற்றும் போது சாதாரணமாக கிடைக்கும் பலனை விட பல மடங்கு அதிகமான பலனை பெற முடியும் என்பதற்காகத்தான் விசேஷ நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது நல்லது என்பதை நாலு பேருக்கு தெரிய வைக்கின்றோம்.
இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் முதல் நாள் நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்
உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களில் உங்களால் முடிந்த விஷயங்களை செய்யுங்கள். நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.