- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி மாதம் முதல் நாள் நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்

ஆடி மாதம் முதல் நாள் நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்

- Advertisement -

ஆடி மாதம் என்றால் காற்று அதிகமாக வீசக்கூடிய மாதம் என்று சொல்லுவார்கள். ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்ற பழமொழி உண்டு. காற்றின் மூலம் எந்த ஒரு நோய் நொடிகளும் நம் வீட்டை அண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேப்பிலைகளை நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும்.

வேப்பிலை ஒரு கிருமி நாசினியாக செயல்படும் என்ற ஒரு நம்பிக்கையும் நம்மிடத்தில் இருந்து வருகிறது. நாளைய தினம் ஆடி முதல் தேதி பிறக்கிறது. நம்முடைய வீடு, நம்முடைய குடும்பம், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எந்த ஒரு நோய் தொற்றாலும் நம்முடைய குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்றால், நாளைய தினம் அம்பாளை வேண்டி ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஆடி மாதம் முதல் நாள் நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்

ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கு உரிய மாதமாகும். பெண் தெய்வத்திற்கு உரிய மாதமாகும். எல்லா அம்மன் கோவில்களிலும் நாளை விசேஷம் ஆரவாரத்தோடு துவங்கும். எல்லா கோவில்களிலும் அம்மன் சந்தோஷமாக அமர்ந்திருப்பாள். ஆடை அலங்காரத்தோடு அப்படியே ஜொலிப்பாள் அம்மன்.

கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண்கள் நாளைய தினம் காலையிலேயே சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதை செய்ய மறக்காதீங்க. இந்த வழிபாட்டின் போது உங்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் வேண்டுதலை வைக்கலாம். அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

கோவிலுக்கு போகும் போது 3 கொத்து வேப்ப இலை, 2 விரலி மஞ்சள், ஒரே ஒரு எலுமிச்சம்பழம் இந்த மூன்று பொருட்களையும் எடுத்துச் செல்லுங்கள். இந்த பொருளை அர்ச்சகரிடம் கொடுத்து அம்பாளின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து இந்த 3 பொருட்களையும் திரும்பவும் நீங்கள் வாங்கிக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய முந்தானையில் இதை வாங்குவது சிறப்பு.

இதை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து மீண்டும் குலதெய்வத்தையும் அம்பாளையும் மகனசார வேண்டி இதை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் கட்டி விட வேண்டும். ‘ஓம் சக்தி பராசக்தி, ஓம்சக்தி பராசக்தி’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஆடி மாதம் முழுவதும் அம்பாள் உங்கள் நிலை வாசலில் தங்கி உங்கள் குடும்பத்தை காப்பாற்ற வந்து விடுவாள். ஆடி மாசம் நிறைவடையும் வரை, இந்த பொருளை மாற்ற வேண்டாம். ஆடி மாதம் முடியக்கூடிய நாளன்று அம்பாள் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபாடு செய்து விட்டு வந்து, இந்த முடிச்சை கழட்டி கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

இதையும் படிக்கலாமே: பஞ்சம் தீர்க்கும் ஆடி மாத வளர்பிறை ஏகாதசி

இந்த ஆடி மாதம் முழுவதும் அம்பாலின் அருளாசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்க, ஆடி மாதம் முழுவதும் அம்பாள் உங்கள் வீட்டிலேயே தங்க, இந்த எளிமையான வழிபாடு கை கொடுக்கும். இதையும் தாண்டி நம் வீட்டிற்குள் எந்த நோய் நொடியையும் அண்டாமல் பாதுகாக்க கூடிய வேலையையும் அந்த அம்பாள் பார்த்துக் கொள்வாள் என்பதுதான் இந்த ஆன்மீகம் பரிகாரத்தில் பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை. இது ஒரு எளிமையான பரிகாரம் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் உங்களுக்கு அம்பாளின் மீது முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்