- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை

திக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை

- Advertisement -

இந்த உலகத்தில் எந்த திசையில் சென்றால் நமக்கு நல்லது நடக்கும், என்று சில பேர் தடுமாறுவார்கள். அதாவது நான்கு திசைகளில் எந்த திசை சென்றாலும் கஷ்டம் நம்மை துரத்தி துரத்தி அடிக்கும். நல்லது வரக்கூடிய திசை தெரியாமல் தவித்து திணறி வருவோம். திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை என்று சொல்லுவார்கள். எந்த திசையில் இருந்து பிரச்சனை வருகிறது என்றே தெரியாது.

பல திசையில் இருந்து அம்பு வந்து நம்மை குத்துவது போல, அடி மேல் அடி விழும். தலை நிமிர முடியாத சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். இப்படி மூச்சு திணற திணற துன்பத்தில் துவண்டு போய் இருப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

திக்கற்றவர்களுக்கு திசை காட்டும் முருகர் வழிபாடு

திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்று சொல்லி வைத்த முன்னோர்கள். திக்கற்றவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் தான் துணை என்று சொல்ல மறந்து விட்டார்கள். அதை இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்வோம். திக்கற்றவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் நிச்சயம் நல்லது வரக்கூடிய திசையை காட்டிக் கொடுப்பான்.

திருச்செந்தூர் முருகனை நினைத்து உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். வெற்றிலை, வெற்றியை கொடுக்கக் கூடிய ஒரு இலை. முருகன் கோவிலுக்கு காலை 6:00-7:00 மணிக்குள் சென்று இந்த விளக்கை ஏற்றலாம். முடியாதவர்கள் மாலை 6:30 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்கு சென்று இந்த விளக்கு ஏற்றுங்கள். ஆறு வெற்றிலையில், ஆறு விளக்கு, முருகப்பெருமானுக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

என்னடா இது செவ்வாய்க்கிழமை தானே இந்த பரிகாரத்தை செய்வார்கள். ஆனால் இந்த பதிவில் திங்கட்கிழமை என்று சொல்லப்பட்டுள்ளது. குழம்பாதிங்க திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்தால் திக்குத் தெரியாத உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். செவ்வாய்க்கிழமை என்பது கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஏற்றக்கூடிய விளக்கு.

திங்கட்கிழமை வெற்றிலை விளக்கு முருகன் கோவிலுக்கு சென்று ஏற்றினால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் நீங்கும். சிக்கலில் இருந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் மீட்டு எடுக்கலாம். எப்போதுமே குழப்பத்தோடு ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தால், அவனால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அந்த குழப்பத்திலிருந்து சிக்கலில் இருந்து அவனை விடு பட வைக்க கூடிய வழிபாடு தான் திங்கட்கிழமை முருகன் வழிபாடு.

- Advertisement -

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று திருச்செந்தூர் முருகனை நினைத்து அந்த விளக்கை ஏற்றி வையுங்கள். 27 திங்கட்கிழமை இந்த வழிபாட்டை நீங்கள் முடிவு செய்வதற்குள், உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் நீங்கி இருக்கும். முடிந்தால் 27 வாரம் கழித்து உங்களுக்கு நல்ல காலம் பிறந்த பிறகு திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த கடனை திரும்ப பெற பரிகாரம்

எந்த கிழமையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றாலும் சரி, அங்கேயும் சென்று இதேபோல வெற்றிலையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை பிறகு சொர்க்கமாக மாறிவிடும். எளிமையான வழிபாடு தான், நம்பிக்கை உள்ளவர்கள் செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்