பணம் கொடுக்கல் வாங்கல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எவ்வளவு பணத்தை கொடுக்கிறோம், எவ்வளவு பணத்தை வாங்குகிறோம் என்பது மட்டுமே வித்தியாசப்படும். ஏழையாக இருப்பவர்கள் 100, 200 என்று வாங்கி அதை திருப்பித் தருவார்கள். இதே மிகவும் வசதி படைத்தவர்களாக இருக்கும் பொழுது 10 லட்சம் 20 லட்சம் என்று வாங்குவார்கள். கடன் கொடுத்தாலும் வாங்கினாலும் அதை மறுபடியும் திரும்ப கடனாக தொடராமல் முடித்து விட வேண்டும். அதுதான் முக்கியம். ஒருவரிடம் அதிக அளவில் பணம் இருக்கிறது என்பதற்காக பிறருக்கு கடன் கொடுப்பது கிடையாது. அதன் மூலம் ஏதாவது ஒரு வருமானத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கடனாக தருகிறார்கள்.
மேலும் அந்த பணமானது அவர்கள் சுலபத்தில் பெற்ற பணமாக இருக்காது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமாகவே இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வருமானம் பெருக வேண்டும் என்பதற்காக கடனாக தரும்பொழுது பலருக்கும் பல நேரங்களில் அந்த கடன் தொகை திரும்ப கிடைக்காமல் பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு முயற்சிகளை செய்தும் அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்று நினைப்பவர்கள் புதன்கிழமை தூறும் அரச மரத்தடியில் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்தால் கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்துக்கு முதலில் நமக்கு பூஜபத்ரா என்னும் பட்டை வேண்டும். இது ஆன்லைனில் கிடைக்கிறது. இது மிகவும் மெல்லியதாக இருக்கும். இதை வாங்கிக் கொள்ளுங்கள். புதன்கிழமை அன்று காலையிலேயே ஒரு கட்டி கற்பூரத்தை பற்றவைத்து அதில் ஒரு எவர்சில்வர் தட்டை காட்டி அதன் புகையை அந்த தட்டில் படும்படி காட்ட வேண்டும்.
கற்பூரம் முழுவதும் எரிந்து முடித்த பிறகு அந்த தட்டில் ஒட்டிய கரியை மோதிர விரலால் தொட்டு யாருக்கு நீங்கள் கடனாக பணத்தை கொடுத்து இருக்கிறீர்களோ, யார் அந்த கடன் தொகையை திருப்பித் தராமல் இருக்கிறார்களோ அவர்களின் பெயரை அந்த பட்டையில் எழுத வேண்டும். இவ்வாறு எழுதி முடித்துவிட்டு இந்த பட்டையை எடுத்துக்கொண்டு அரசமரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும் பொழுது இந்த பட்டையுடன் ஒரு கோமதி சக்கரம், ஒரு சிறிய கட்டிப் பெருங்காயம், ஒரு புதிதாக வாங்கிய ஆணி, ஒரு எலுமிச்சம்பழம் இவற்றை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அரச மரத்தடியில் ஒரு இடத்தில் பெயர் எழுதிய பட்டையை வைத்துவிட்டு அதற்கு மேல் நாம் எடுத்துச் சென்ற கோமதி சக்கரம் மற்றும் பெருங்காயத் கட்டியை வைக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை அந்த கோமதி சக்கரம், பெருங்காயம், பட்டை இது மூன்றிலும் படும் படி பிழிந்து விட வேண்டும்.
பிறகு ஆணியை பயன்படுத்தி அதை அப்படியே மண்ணில் குத்தி வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்யும் பொழுது நாம் யாரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தோமோ அவர்களிடம் இருந்து வர வேண்டிய பணத்தொகையானது விரைவிலேயே வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: தீராத கடன் தீர தண்ணீர் பரிகாரம்
இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் புதன்கிழமை தோறும் செய்பவர்களுக்கு அவர்கள் கொடுத்த கடன் தொகை விரைவிலேயே அவர்களை வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.