ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். அதே போல் ஒவ்வொரு பொருளுக்கும் தெய்வங்களை ஆகாசனம் பண்ணக்கூடிய சக்தியும் இருக்கும். எந்த தெய்வத்திற்கு எந்த பொருள் உகந்தது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் நாம் அந்த பொருட்களை நம்முடைய வீட்டிற்கு வாங்கி வந்தால் அந்த தெய்வத்தையே நம் வீட்டிற்கு அழைத்து வந்ததற்கு சமமாக கருதப்படுகிறது. அந்த வகையில் எந்த பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்தால் மகாலட்சுமி மற்றும் குலதெய்வம் வீட்டிற்குள் வருவார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்க
பொதுவாக மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள் என்று பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை சுக்கிர ஹோரையில் நாம் வீட்டிற்குள் வாங்கி வரும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும் சுக்கிர பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்று பல பொருட்களை நமக்கே தெரிந்திருக்கும். பலரும் அந்த பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி வந்து வீட்டில் சேர்த்து வைக்கும் வழக்கமும் வைத்திருப்பார்கள்.
அந்த முறையில் நாளை ஆடி மாதம் 1ம் தேதி இந்த நாளில் நாம் மிகவும் எளிதில் வாங்கக்கூடிய இரண்டே இரண்டு பொருட்களை வைத்து மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தின் வருகையை உறுதி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்கள்தான் ஏலக்காய் மற்றும் உப்பு. எந்த உப்பாக இருந்தாலும் பரவாயில்லை உப்பையும் ஏலக்காயும் வீட்டிற்குள் வாங்கி வர வேண்டும். எப்பொழுது வாங்கி வர வேண்டும் என்பதுதான் முக்கியம்.
எமகண்டம், ராகு காலம் எதுவும் இல்லாமல் நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து, கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்த்து இவை அனைத்தும் பொருந்தி வரக்கூடிய நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று கல்லுப்பையும் ஏலக்காயும் வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்படி நல்ல நேரம் பார்த்து வீட்டிற்குள் இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு வரும்பொழுது கண்டிப்பான முறையில் அந்த பொருட்களோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரும் குலதெய்வமும் வீட்டிற்குள் வருவார்கள்.
இந்த பொருட்களோடு சேர்த்து இன்னும் சில பொருட்களையும் நாம் வாங்கி வரலாம். விரலி மஞ்சள், பச்சரிசி, வெல்லம் இவற்றையும் வாங்கி வரும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்
முழு நம்பிக்கையுடன் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் எப்படி கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வருகிறோமோ அதே போல் நாளைய தினமும் நல்ல நேரம் பார்த்து ஏலக்காய் மற்றும் கல்லுப்பை வீட்டிற்குள் வாங்கி வந்து குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.