நம்முடைய முகம் எந்த அளவிற்கு அழகாகவும், மிருதுவாகவும், பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதே போல் தான் நம்முடைய முடியையும் அழகாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பலரும் பல ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவற்றை உபயோகப்படுத்துகிறார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் கெமிக்கல் இருப்பது மட்டும்தான்.
அப்படிப்பட்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களால் நம் தலை முடிக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுமே தவிர்த்து தலை முடியை நம்மால் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியாது. அப்படி என்றால் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது அல்லவா? அந்த கேள்விக்குரிய பதிலாக தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு செய்யக்கூடிய ஹேர் பேக்கை பற்றி பார்க்க போகிறோம்.
தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல பொருட்கள் நம்முடைய வீட்டிலேயே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சில பொருட்கள் எல்லாவித ஹர்பாக்கிலும், எண்ணெய் தயாரிக்கும் பொழுதும் பயன்படுத்துவோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் தேங்காய். தேங்காயில் இருந்து சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்து நம்முடைய தலைக்கு நாம் தேய்ப்பதன் மூலம் நம்முடைய தலைமுடி என்பது வறண்டு போகாமல் நல்ல ஆரோக்கியத்துடன் வளர ஆரம்பிக்கும் என்பது பலருக்கும் தெரியும்.
இப்படி நாம் தேங்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்துவது போலவே வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் பாலை நம்முடைய தலையில் பயன்படுத்தும் போது நம்முடைய தலைமுடி ஆரோக்கியமாக வளரும் என்று கூறப்படுகிறது. தேங்காய் பாலில் பல அற்புத சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்தது தேங்காய் பால் என்று கூட கூறுவார்கள். அப்படிப்பட்ட தேங்காய் பாலை நம்முடைய தலைமுடியில் தடவும் போது அதற்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும் தலைமுடியை மிருதுவாகவும், பொலிவுடன் பளபளப்பாகவும் காட்ட உதவும். அப்படிப்பட்ட தேங்காய் பாலுடன் நாம் வெந்தயத்தை சேர்த்து ஹேர்பேக் தயார் செய்யும் பொழுது நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு எந்த வித குறையுமே இருக்காது என்று தான் கூற வேண்டும். நம்முடைய உடலை குளிர்ச்சியாக்குவதோடு தலையில் இருக்கக்கூடிய பொடுகு போன்றவற்றை நீக்கவும், தலைமுடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யவும், அதேசமயம் தலைமுடியை ஆரோக்கியமாக வளர வைக்கவும் உதவுகிறது.
இந்த ஹேர் பாக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைமூடியில் பாதி அளவு மட்டும் தேங்காயை கீறி போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தையும் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து தேங்காய் பாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல் இரண்டு முறை சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்து ஒரு மூடி போட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து தேங்காய் பாலை எடுத்து நம்முடைய தலையின் வேர்க்கால்களில் நன்றாக படும் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். மீதம் இருக்கும் தேங்காய் பாலை நம்முடைய முடியிலும் தடவிக் கொள்ளலாம். முடி பிளவு ஏற்பட்டு இருப்பவர்கள் அந்த பிளவை நீக்கிவிட்டு இந்த ஹேர் பேக்கை உபயோகப்படுத்தும் பொழுது முடிப்பளவு மறுபடியும் ஏற்படாது. அதேசமயம் முடி வேகமாகவும் வளர ஆரம்பிக்கும். இந்த ஹேர் பேக்கை குறைந்தபட்சம் 20 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை கூட நம்முடைய தலையில் வைத்து இருக்கலாம். பிறகு மைதான ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை அலசி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வயதை குறைத்து முக அழகை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ச்சியாக இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வந்தோம் என்றால் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்குவதோடு முடி ஆரோக்கியமாகவும் பட்டுப்போல மிளிரவும் ஆரம்பிக்கும்.