- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டமும் பண வரவும் ஏற்பட பரிகாரம்

அதிர்ஷ்டமும் பண வரவும் ஏற்பட பரிகாரம்

- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் எந்த ஒரு தெய்வத்தை வணங்கினாலும் அந்த தெய்வத்தை வணங்கிய பிறகு அந்த தெய்வத்தின் பிரசாதமாக குங்குமத்தையோ அல்லது திருநீரையோ அல்லது செந்தூரத்தையோ ஏதாவது ஒன்றை தங்களுடைய நெற்றியில் வைக்கும் பழக்கம் என்பது இருக்கும். இது தெய்வத்தின் பிரசாதமாக கருதப்பட்டாலும் இந்த மாதிரி நாம் நெற்றியில் வைப்பதில் பல அறிவியல் பூர்வமான ஆதாயங்கள் இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குங்குமத்தை நம்முடைய நெற்றியில் வைப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதிர்ஷ்டமும் பண வரவும் ஏற்பட பரிகாரம்

குங்குமம் என்பது மங்களகரமான பொருட்களுள் ஒன்றாக திகழ்கிறது. வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து சுப காரியங்களிலும் குங்குமம் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது. மேலும் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாக குங்குமம் திகழ்கிறது. மகாலட்சுமி தாயாராக இருந்தாலும், பராசக்தியாக இருந்தாலும், சரஸ்வதி தேவியாக இருந்தாலும் குங்குமத்தால் நாம் அர்ச்சனை செய்தோம் என்றால் அவர்களின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

மேலும் திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும் ஆகாத பெண்களாக இருந்தாலும் அவர்களுடைய நெற்றியில் சிறிதளவாவது குங்குமத்தை வைப்பதன் மூலம் யாரும் அவர்களை வசியம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. திருமணமான பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களுடைய நெற்றி வகுப்பில் குங்குமத்தை வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அந்த இடத்தில் தான் சீமந்த ரேகை என்ற ஒரு ரேகை இருப்பதாகவும் அந்த ரேகையில் தினமும் நம் குங்குமத்தை வைப்பதன் மூலம் அங்கிருக்க கூடிய அந்த நரம்பானது தூண்டப்பட்டு விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த குங்குமத்தை சில முறைகளில் நாம் வைக்கும் பொழுது நமக்கு அதிக அளவில் பண வரவும் அதிர்ஷ்டமும் உண்டாக்கும்.

- Advertisement -

தினமும் காலையில் பெண்கள் குளித்து முடித்துவிட்டு தங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு கிழக்கு முகமாக பார்த்து தங்களின் இஷ்ட பெண் தெய்வத்தின் பெயரை உச்சரித்தவாறு தங்களுடைய நெற்றி உச்சியிலும் நெற்றியிலும் புருவ மத்தியிலும் திருமாங்கல்யத்திலும் குங்குமத்தை வைக்க வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக அர்த்தம். அப்படிப்பட்ட இடங்களில் நாம் தினமும் குங்குமம் வைக்கும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு வைப்பதாக கருதப்படுகிறது.

இதனால் திருமணம் ஆன பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக தாழம்பூ குங்குமத்தை வைப்பது என்பது மிகவும் சிறப்புக்குரியது. திருமணமாகாத பெண்கள், திருமணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் பெண்கள், விரைவிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய பெண்கள் இந்த தாழம்பூ குங்குமத்தை ஐந்து சுமங்கலி பெண்களிடம் கொடுத்து அவர்களை நெற்றியில் வைக்க சொல்லி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதன் மூலம் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமத்தை தருவதன் மூலம் மகாலட்சுமிக்கு குங்குமத்தை தருவதற்குரிய பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண்களும் புருவ மத்தியில் குங்குமத்தை வைப்பதன் மூலம் அவர்களுக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடன் தொல்லை தீர பாசிப்பருப்பு பரிகாரம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குங்குமத்தை நாம் நெற்றியில் வைப்பதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும். வீண் விரயங்கள் எதுவும் ஏற்படாது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்