பலரும் சொல்லில் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்க அம்மா கஷ்டப்பட்டார்கள், அதேபோல் நானும் கஷ்டப்படுகிறேன், என்னோடு சேர்ந்து என் குழந்தையும் கஷ்டப்படுகிறது என்று. ஒவ்வொரு பெற்றோருக்கும் தாங்கள் பட்ட கஷ்டத்தை தங்களுடைய பிள்ளைகள் படக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதற்குரிய முயற்சிகளை தான் செய்வார்கள். இருப்பினும் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே வரும். இது பரம்பரை ரீதியாக கூட வரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட தொடர்கதையாக இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கு உதவக்கூடிய தெய்வமாக திக்பவர் தான் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி தேவியை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய தொடர் பிரச்சினைகளும் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ராஜராஜேஸ்வரி அம்மனை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அசுரனை வதம் செய்வதற்காக ஒரு போர்படையை தயார் செய்தார்கள் என்றும் அவர்களுக்கு பாதுகாவலாக திகழ்ந்தவர்கள் தான் சப்த கன்னிகள் என்றும் நாம் படித்திருப்போம். அந்த சப்த கன்னிகளில் ஐந்தாவது இருக்கக்கூடிய வாராகி அம்மனை பற்றி பலரும் அறிந்திருப்போம். இந்த சப்த கன்னிகளில் ஒருவராக திகழ்பவர்கள் தான் திகழ்பவர் தான் வைஷ்ணவி அம்மன்.
வட மாநிலத்தில் அதிக அளவில் வைஷ்ணவி தேவியை வழிபடும் வழக்கம் என்பது இருந்து வருகிறது. இந்த வைஷ்ணவி அம்மன் வழிபாட்டை நாம் ஆலயத்திற்கு சென்று செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் இந்த அம்மனை நம் வழிபாடு செய்யலாம். இந்த அம்மனை வழிபாடு செய்வதற்கு இந்த அம்மனின் படம் இருக்க வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் குங்குமத்தை போட்டு சிறிது பன்னீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி தீபத்தை ஏற்றி முடித்த பிறகு “ஓம் வைஷ்ணவி தேவியே நமஹ” என்னும் மந்திரத்தை 54 முறையோ அல்லது 108 முறையோ மனதார உச்சரிக்க வேண்டும்.
இதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமைகளில் வைஷ்ணவி தேவிக்கு தேங்காயில் நெய் ஊத்தி தீபம் ஏற்றி வழிபடுவது என்பதும் சிறப்புக்குரிய வழிப்பாடாகவே திகழ்கிறது. இப்படி நாம் வைஷ்ணவி தேவியை வழிபடும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். நாம் பட்ட கஷ்டங்களை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்காமல் நல்ல விதத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமையும்.
இதையும் படிக்கலாமே ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும். நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.