நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்ப்பதற்கு காரணம் நம்முடைய வருங்கால சங்கதியினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். அப்படி வருங்கால சந்ததிகளாக திகழ்பவர்கள் நம்முடைய சந்ததிகளா். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நல்லவிதமான கல்வி அறிவு ஏற்பட வேண்டும். என்னதான் நல்ல பள்ளிக்கூடமாக பார்த்து நாம் சேர்த்து விட்டாலும் அவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அவர்களால் படிக்க முடியும். ஆடி பௌர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய ஹயக்ரீவர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவர் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்படி அவருடைய பிறந்த தினமான இந்த ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று நாம் அவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? ஹயக்ரீவர் என்பவர் சரஸ்வதிக்கு குருவாக விளங்கியவர். கல்வியில் சிறந்தவரே சரஸ்வதி என்று கூறுகிறோம். அவருக்கு குருவாக இருப்பவரே ஹையக்ரீவர் என்றால் அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்? இவரை நாம் மனதார வழிபாடு செய்தோம் என்றால் நம் குழந்தைகள் படிப்பில் சிறந்த இருப்பார்கள்.
நமக்கும் அறிவு, ஞானம், சிந்தனை, புத்தி கூர்மை அனைத்துமே நமக்கு பொதுவாக தேவையான ஒரு விஷயங்கள். பெரியவர்களாக இருந்தாலும் சரி படிக்கக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி ஹயக்ரீவர் வழிபாடு என்பது அனைவரும் செய்யலாம். கல்வியில் சிறந்த விளங்குவதற்காக ஹயக்ரீவரை நாம் எவ்வாறு வழிபட செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்.
ஹயக்ரீவர் படத்தை முழுமையாக சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஹயக்ரீவர் படம் இல்லை என்பவர்கள் அருகில் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நிச்சயமாக ஹயக்ரீவரின் சன்னதி காணப்படும். அங்கு சென்றும் நீங்கள் இந்த வழிபாட்டினை செய்யலாம். மேலும் லட்சுமி ஹயக்ரீவர் ஆக இருக்கக்கூடிய படங்களை வீட்டில் வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இந்த வழிபாட்டினை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக சக்தி வாய்ந்த ஒன்றாக இது விளங்கும். படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு, ஹயக்ரீவர் படத்திற்கு ஏலக்காய் மாலை சாற்ற வேண்டும். இந்த ஏலக்காய் மாலை ஆனது 108, 27 என்ற எண்ணிக்கையில் கட்டலாம். உங்கள் வீட்டில் ஹயக்ரீவர் படமானது சிறிதாக இருந்தால் கவலைப்படாதீர்கள். 11 ஏலக்காய் வைத்து மாலை போடுங்கள். அவருக்கு பிடித்த நெய்வேத்தியமானது சர்க்கரை பொங்கல்.
அப்படி உங்களால் நாளை சர்க்கரை பொங்கல் செய்யும் அளவிற்கு கால நேரம் இல்லை என்றால் மனதார வேண்டி ஒரு கிண்ணத்தில் ஏலக்காய் போட்ட பால் வைத்தாலே போதும். பின்னர் தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டிவிட்டு ஹயக்ரீவரின் மூல மந்திரத்தை 27 முறை மனதார உச்சரிக்க வேண்டும். எனக்கு நல்ல நியாபகம் கொடு, நல்ல கல்வியை கொடு, நல்ல ஞானத்தை கொடு என்று ஹயக்ரீவரை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஆடி பௌர்ணமியில் சொல்ல வேண்டிய சந்திரன் மந்திரம்.
தங்கள் குழந்தைகள் சரியாக படிக்க மாட்டேங்கிறார்கள் ஞாபக மறதி அதிகமாக இருக்கிறது இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் நம் குழந்தைகளிடம் இருக்கும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இந்த ஹயக்ரீவர் வழிபாட்டை ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று அதாவது நாளைய தினம் செய்வது மிகவும் சிறப்பு. அதிலும் பௌர்ணமி இருக்கக்கூடிய அந்த நேரத்தில் இதனை செய்யலாம். ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அதுமட்டுமல்லாமல் நாளை ஆடி பவுர்ணமியும் வருகிறது. ஆடி பவுர்ணமி அன்றுதான் இந்த ஹயக்ரீவர் அவதரித்தார். அதனால் அந்த நாளில் நாம் ஹயக்ரீவரை வழிபாடு செய்வதால் மிக மிக நல்ல நன்மைகள் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.