- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவகிரகங்களின் அருளை பெற வழிபாடு

நவகிரகங்களின் அருளை பெற வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக திகழக்கூடியவர்கள் நவக்கிரகங்களே. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் அவர்களுடைய வாழ்க்கையும் நடக்கும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் அவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவும், நவக்கிரகங்களின் அருளை பரிபூரணமாக பெறவும் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்களின் அருளை பெற வழிபாடு

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற நவகிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் சரியான அமைப்பில் இருந்தால் அந்த ஜாதகம் தான் யோகமான ஜாதகம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகங்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு பொருத்தும் பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்தை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும், எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும்.

- Advertisement -

இப்படி நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடியவர்களாக திகழக்கூடிய இந்த நவக்கிரகங்கள் நமக்கு நன்மையை தர வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினைகள் என்பது குறைய வேண்டும். கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நவகிரகங்கள் நம்முடைய ஜாதகத்தில் பிரதிபலிக்கின்றன. அதனால் முடிந்த அளவிற்கு கர்ம வினைகளை குறைத்துக் கொள்ளும் பொழுது கண்டிப்பான முறையில் நவக்கிரகங்களின் அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் நல்ல பலன்களையும் நம்மால் பெற முடியும்.

இந்த கர்ம வினைகளை குறைப்பதற்கு தான தர்மங்களை அதிக அளவில் செய்ய வேண்டும், யாருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்க கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நவகிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது, நவகிரகங்களுக்கு வஸ்திரம் வாங்கி கொடுப்பது, நவகிரகங்களுக்கு எண்ணை காப்பு செய்வதற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது, மலர்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற விஷயங்களை நாம் செய்யும் பொழுது நவகிரகங்களின் அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இது அனைத்து கிரகங்களுக்கும் பொதுவாக கூறப்படுகிறது. நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கிரகம் மட்டும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் பட்சத்தில் அந்த கிரகத்திற்குரிய கிழமை அன்று நவகிரக ஆலயத்திற்கு சென்று அந்த கிரகத்திற்குரிய தானியத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அந்த கிரகத்தின் அருளை நம்மால் பெற முடியும். வசதி படைத்தவர்கள் வீட்டில் நவகிரக ஹோமம் போன்றவற்றை செய்வார்கள்.

மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தையுமே செய்பவர்களுக்கு நவகிரகங்களின் அருள் கிடைக்கும். இந்த விஷயங்களை தவிர்த்து மிகவும் எளிமையான முறையில் நவகிரகங்களின் அருளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவகிரகங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சில பாடல்கள் இருக்கின்றன, அந்த பாடல்களை நாம் பாராயணம் செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் நமக்கு நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த பாடல்களில் ஒன்று-

- Advertisement -

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும் உடனே
ஆசுஅறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே
.”

சிவபெருமானின் இந்த பாடலை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கோளாறுகளும் நீங்கும் என்று கோளாறு பதிகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே:வற்றாத செல்வத்தை பெற பரிகாரம்

நவகிரகங்களுக்குரிய வழிபாட்டை செய்வதோடு இந்த பதிகத்தையும் தினமும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும் மேலும் நவகிரகங்களின் அருளும், சிவபெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்