ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக திகழ்வது பணம் மட்டும்தான். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் நம்மால் பெற முடியும். வீட்டிலும் சரி சமுதாயத்திலும் சரி எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்வதற்கு நம்முடைய மனம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நம்முடைய பையில் இருக்கக்கூடிய பணமும் முக்கியமான ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை தடையின்றி வர வைக்கவும் வற்றாத செல்வத்தை பெறவும் செய்யக்கூடிய எளிமையான தாந்திர பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வற்றாத செல்வத்தை பெற பரிகாரம்
பொதுவாக பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நம்முடன் வைத்துக் கொண்டால் நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதன் மூலம் மன வரவும் ஏற்படும். இப்படி பல பொருட்கள் இருக்கின்றன. நம்மில் பலரும் இந்த பொருட்களை பயன்படுத்தி செல்வ வளத்தை அதிகரித்தும் இருப்பார்கள். அந்த வகையில் இன்றைய தினம் நாம் சில பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஒரு சிறிய துணிப்பையை எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சுருக்குப்பை என்று வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த பைப் போல ஒரு பையை வைத்து அதற்குள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, நான்கு ஐந்து மிளகு, துளசி இலை, பச்சை கற்பூரம், மஞ்சள் தூள் இவை அனைத்தையும் அதனுள் போட்டு அந்த துணி பையை தைத்து விடுங்கள். இந்த துணிப்பை நாம் நம்முடைய வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் பணம் புழக்கம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் வைக்க வேண்டும். அதற்கேற்ற போல் எண்ணிக்கையில் இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் பூஜை அறையிலோ அல்லது சமையல் அறையிலோ இந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிறிய மண் குடுவை அதாவது சிறிய அளவில் இருக்கக்கூடிய மண்பானையை வாங்கி அதில் வைக்கலாம். அது இன்னும் அதிக பலனை தரும். இந்த மண்பானையில் இருக்கக்கூடிய பொருட்களை யாரும் பார்க்கக்கூடாது என்று நினைத்தால் அதற்கு மேல் செயற்கை மலர்களை வைத்து ஒரு பூத்தொட்டி போல் மாற்றி கூட வைத்து விடலாம்.
இதில் இருக்கக்கூடிய இந்த பொருட்கள் அனைத்துமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களாக திகழ்கிறது. இந்த பொருட்கள் அனைத்தும் ஆறு மாதம் வரை பலன் தரும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த பொருட்கள் அனைத்தையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிதாக வேறு பொருட்களை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே :குபேர சம்பத்து பெற பரிகாரம்
நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும், மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறவும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கவும், வற்றாத செல்வத்தை பெறவும் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம் உதவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.