- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணப் பிரச்சனை தீர வாராஹி அம்மன் வழிபாடு

பணப் பிரச்சனை தீர வாராஹி அம்மன் வழிபாடு

- Advertisement -

உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும், அது சரியாக ஆடி மாதம் வராகி அம்மனை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்யுங்கள். மற்ற நாட்களில் இந்த பரிகாரத்தை செய்வதை விட, இந்த ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது கூடுதல் பலனை தரும் என்பதால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை இந்த ஆடி மாதத்தில் உங்களோடு பகிர்ந்து உள்ளோம்.

ஆடி மாதம் அம்மன் வழிபாடு

உங்களுடைய வீட்டில் அம்பாளின் சிலை இருக்கிறது. வாராகி அம்மன் சிலையாக உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இருந்தால் அந்த அம்மனுக்கு உங்கள் கையால் சந்தனாதி தைலத்தை வாங்கி தடவி அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனாதி தைலம் என்பது நாட்டு மருந்து கடைகளில் விற்கக்கூடிய ஒரு பொருள். இறைவனுக்கு அபிஷேகத்திற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.

- Advertisement -

இந்த சந்தனாதி தைலத்தை வாராகிக்கு அபிஷேகம் செய்தால் உங்கள் கடன் சுமை குறையும். வாரா கடன் வசூல் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது தீரும். உங்களுடைய வீட்டில் வாராகியின் திருவுருவ சிலை இல்லை. நீங்கள் எப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்வது. வாராகி சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலை தேடி நீங்கள் செல்ல வேண்டும்.

அந்த வாராஹி தாய்க்கு அபிஷேகம் செய்வதற்கு உங்கள் கையால் சந்தனாதி தைலத்தை வாங்கி கோவில் குருக்களிடம் கொடுத்து, இதை அவளுக்கு அபிஷேகம் செய்ய சொல்லுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுத்த சந்தனாதி தைலத்தால் கோவிலில் இருக்கும் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்தாலும் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

கூடவே உங்களால் முடிந்தால் அம்பாளுக்கு சிவப்பு நிறத்தில் புடவை வாங்கி தானம் கொடுங்கள். இந்த பூஜையை செய்யும் போது சிவப்பு நிறத்தில் இருக்கும் பூக்களை வாங்கிக் கொடுக்கவும். குறிப்பாக செவ்வரளி பூ, சிவப்பு நிற செம்பருத்திப்பூ, இவைகள் அம்பாளுக்கு ப்ரீத்தி. உங்களுக்கு கருநீல சங்கு புஷ்பம் கிடைத்தாலும் அதை வாங்கி அம்பாளுக்கு சாத்தலாம்.

இந்த அபிஷேகம் செய்யும்போது உங்கள் மனசு முழுவதும், உங்கள் பண கஷ்டம் தீர வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும்,என்ற எண்ணம் இருக்க வேண்டும், பிறகு பாருங்கள். அடுத்து ஒரு சில நாட்களிலேயே நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: திக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை

வராகி அம்மனை இந்த ஆடி மாதத்தில் ஒரே ஒரு நாளாவது மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்