சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தியானது நாளைய தினம் 24- 7-2024 ஆம் தேதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இது ஆடி மாதம் என்பதால் இந்த சங்கடஹர சதுர்த்திக்கு இன்னும் கூடுதல் பவர். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நாளை செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீக பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
வேண்டுதல் நிறைவேற சங்கடஹர சதுர்த்தி முடிச்சு
நாளைய தினம் காலை 11 மணிக்கு மேலேதான் சங்கடஹர சதுர்த்தி திதி பிறக்கிறது. பெண்கள் நாளை காலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதத்தை தொடங்குங்கள். உபவாசம் இருப்பது அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்தது. உங்கள் விருப்பப்படி விரதத்தை மேற்கொள்ளலாம்.
நீங்கள் விரதம் இருந்தாலும், விரதம் இல்லை என்றாலும் சரி, நாளைய தினம் அசைவம் சாப்பிடாமல் சுத்தபத்தமாக இருந்து இந்த பரிகாரத்தை செய்யவும். நாளை மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குல தெய்வத்திடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு சதுர வடிவில் மஞ்சள் நிற துணி எடுத்துக்கோங்க. அதில் 3 கைப்பிடி பச்சரிசி, 1 விரலி மஞ்சள், 11 ஒரு ரூபாய் நாணயம், வைத்துவிட்டு, உலர்ந்த பேரிச்சம் பழங்கள் 11, கட்டாயமாக வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பலமே இந்த பேரிச்சம்பழம் தான். கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள்.
இன்றே நாட்டு மருந்து கடைகளில் சென்றோ, அல்லது பூஜை பொருட்கள் விற்கக்கூடிய கலைகளில் சென்றோ இந்த உலர் பேரிச்சம் பழத்தை கேட்டீர்கள் என்றால் நிச்சயம் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் துணியில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து சின்ன மூட்டையாக கட்டி, அந்த மூட்டைக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, இதை அப்படியே உங்க வீட்டுப் பிள்ளையார் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். உங்களுடைய பிரார்த்தனையை மனம் உருக சொல்லுங்கள்.
ஏதாவது ஒரு பிரார்த்தனையாக இருக்கட்டும். இன்றைய சூழ்நிலையில் உங்களுக்கு எந்த சங்கடம் முதலில் தீர வேண்டும். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டுமா? கணவருக்கு வேலை கிடைக்க வேண்டுமா? கடன் சுமை குறைய வேண்டுமா? ஆரோக்கியம் கிடைக்க வேண்டுமா? ஏதாவது ஒரு தேவையை மட்டும் சொல்லி அந்த பிரச்சனையை சரி செய்ய விநாயகரிடம் வேண்டுதல் வையுங்கள்.
இறுதியாக விநாயகருக்கு ஏதாவது பிரசாதம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் இந்த முடிச்சு அப்படியே விநாயகரது பாதத்தில் இருக்கட்டும். ஒரு நாள் கழித்து இந்த முடிச்சை எடுத்து ஒரு கவரில் போட்டு பத்திரப்படுத்தி பூஜை அறையில் ஏதாவது ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். உங்களுடைய சங்கடம் என்னைக்கு தீரும் என்று நமக்கு தெரியாது ஆனால் அந்த பிள்ளையாருக்கு தெரியும்.
எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இந்த முடிச்சை கட்டி வைத்தீர்களோ, அந்த வேண்டுதல் குறைந்தது 6 மாதத்திற்குள் நிறைவேற வாய்ப்புகள் இருக்கிறது. இப்படியாக நிச்சயம் நாம் நம்புவோம். வேண்டுதல் நிறைவேறிய பிறகு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த முடிச்சை பிரித்து 11 ரூபாயை கொண்டு போய் பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டு விடவும். அந்த உலர்ந்த பேரிச்சம்பழம் கெட்டுப் போய் இருக்காது.
வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். மீதம் இருக்கும் பேரிச்சம் பழத்தை கொண்டு போய் நசுக்கி ஈ எறும்புகளுக்கு இறையாக போடலாம். அந்த பச்சரிசியை அரைத்து கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு பிரசாதமாக செய்யுங்கள். வீட்டில் இருப்பவர்கள் அந்த கொழுக்கட்டையை பிரசாதமாக சாப்பிடலாம். தெரிந்தவர்களுக்கும் அந்த கொழுக்கட்டையை கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: சகல விதமான அதிர்ஷ்டமும் வசியமாக பரிகாரம்
அந்த முடிச்சில் இருக்கும் மஞ்சளை வீட்டில் இருக்கும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நாளைய தினம் சக்தி வாய்ந்த இந்த முடிச்சை கட்டி வைத்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.