சகல விதமான அதிர்ஷ்டங்களும் நம்மை தேடி வரும்போது தானாக நம்முடைய மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் உயர தொடங்கிவிடும். பிறகு நம்முடைய பேச்சுக்கும் ஒரு மரியாதை இருக்கும். நாம் பேசினால் நாலு பேர் காது கொடுத்து கேப்பாங்க. நம்மையும் நாலு பேருக்கு பிடிக்க தொடங்கி விடும். இப்படி எல்லாம் வாழ வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் தான் இருக்கிறது.
ஆனால் அதிர்ஷ்டமோ, வார்த்தைக்கு உண்டான மரியாதையோ எதுவுமே இந்த சமுதாயத்தில் கிடைக்கவில்லை. எங்களுக்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் நாங்கள் பெற வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக. இந்த மஞ்சளை பின் சொல்ல கூடிய முறைப்படி மந்திரத்தை சொல்லி, உரு ஏற்றி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தினமும் இந்த மஞ்சளை நெற்றியில் இட்டு வந்தால், சகலவிதமான அதிர்ஷ்டமும் உங்களுக்கு வசியம் ஆகும். ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கும். உங்களுடைய பேச்சுக்கே அடுத்தவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து உள்ளவர்களாக மாறிவிடுவீர்கள். அந்த மஞ்சளை எப்படி தயார் செய்வது. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வசிய மஞ்சள் தயார் செய்யும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சளையும், சாதாரண மஞ்சள் தூளையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு உதாரணத்திற்கு 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் சாதாரண மஞ்சள் தூள், போட்டு ஒரு கிண்ணத்தில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். ஒரு தாம்பூல தட்டில் ஒரு வெற்றிலையை வையுங்கள்.
‘ஓம் ஐம் ஹ்ரீம் கிலீம் நம’ என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். எத்தனை முறை சொல்ல வேண்டும் தெரியுமா. உங்களுக்கு எத்தனை வயது பூர்த்தியாகி இருக்கிறது. அத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த மஞ்சளை ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்து, அந்த வெற்றிலையில் போட்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த மஞ்சளை எடுத்து, ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் வெளியே செல்லும்போது இந்த மஞ்சளை நெற்றியிலோ அல்லது உடம்பில் வேறு ஏதாவது பகுதியிலோ பூசிக்கொண்டு போனால் உங்களுக்கான வசிய தன்மை கிடைக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து இருக்கிறது என்றால், 20 முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த மஞ்சளை ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்து அந்த வெற்றிலையில் போட வேண்டும்.
அர்ச்சனை செய்து வைத்திருக்கும் அந்த மஞ்சள் தீர்ந்ததும் புதியதாக இந்த மந்திரத்தை சொல்லி, மஞ்சளை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இதை சுத்த பத்தமாக இருக்கும் சமயத்தில் மட்டும்தான் நெற்றியில் வைத்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்துவிட்டு வந்து இதை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: கடனை துரத்தி அடிக்க விநாயகர் வழிபாடு
இந்த மஞ்சளை நெட்டில் இட்டுக் கொண்டால் உங்களுக்கு வசிய தன்மை கூடும். அதிர்ஷ்டத்தை வசியம் செய்து உங்களுடனே வைத்துக் கொள்ளக் கூடிய பாக்கியமும் கிடைக்கும். அதிர்ஷ்டம் கெட்டவர்கள், சொல்பேச்சுக்கு மரியாதை இல்லாமல், வீட்டில் புறக்கணிக்கப்படுபவர்கள், சமுதாயத்தில் ரொம்பவும் தாழ்ந்த நிலைமையில் இருப்பவர்கள், எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்யும் போது நிச்சயம் அவர்களுக்கு உண்டான உயர்வும் மதிப்பும் மரியாதையும் கூடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.