சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக இருக்கக்கூடியவர் வாராகி அம்மன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உக்கிர தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய தெய்வங்களில் ஒரு தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். வாராஹி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றும் எதிரிகள் தொல்லை விலகும் என்றும் பல விதங்களில் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாராகி அம்மனை எந்த மந்திரம் கூறி வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வராகி அம்மன் மந்திரம்
வாராகி அம்மனை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. ஒருவருக்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்றாலோ அல்லது அவர்கள் செய்யக்கூடிய செயலில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலோ அவர்களால் மேற்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்றாலோ அப்படிப்பட்டவர்கள் கடும் மனவேதனைக்கு ஆளாவார்கள். அந்த மன வேதனையில் இருக்கக்கூடிய நபர்கள் வாராகி அம்மனை வழிபாடு செய்தால் வாராகி அம்மனின் அருளால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. பலரும் பஞ்சமி திதியில் வாராகி அம்மனை வழிபாடு செய்வார்கள். சிலரோ வீட்டிலேயே விக்ரகம் வைத்து அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அம்மனின் படத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். வாராஹி அம்மனின் படத்தையோ சிலையோ வீட்டு பூஜை அறையில் வைக்காமல் ஒரு சாதாரண தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து அந்த தீபத்தில் வாராகி அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களும் பலர் இருக்கிறார்கள்.
இன்னும் சிலரோ வீட்டில் வராகி அம்மனை வழிபாடு செய்யாமல் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். இப்படி வாராகி அம்மனை பல முறைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால் இந்த பதிவில் வாராகி அம்மனை நினைத்து தினமும் கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் நாம் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது வாராஹி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு ஐந்து முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு நம்முடைய அன்றாட வேலைகளை நாம் செய்ய தொடங்கும் பொழுது அந்த வேலைகளில் எந்தவித தடைகளும் ஏற்படாது. மேலும் நாம் எந்த காரியம் நல்ல விதமாக நடைபெற வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும்.
மந்திரம்
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசிய வசிய ஸ்வாகா
இதையும் படிக்கலாமே: நித்திய பூஜை செய்யும் முறை
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் ஐந்து முறை வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும். எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகள் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.