- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநித்திய பூஜை செய்யும் முறை

நித்திய பூஜை செய்யும் முறை

- Advertisement -

வீடு என்பது கோவிலுக்கு சமமாக கருதக்கூடிய ஒன்று. வீட்டில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு கோவிலில் நடப்பது போலவே தினமும் நாம் பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யும்பொழுது தான் வீட்டில் தெய்வ சக்தி என்பது நிரந்தரமாக நிலைத்திருக்கும். அப்படி வீட்டில் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருப்பதற்கு நாம் தினமும் செய்யக்கூடிய பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நித்திய பூஜை

ஒவ்வொரு வீடுமே கோவிலுக்கு சமமாக கருதப்படக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. எந்த வீட்டிற்குள் நாம் நுழையும் பொழுது கோவிலுக்கு இணையான ஒரு தெய்வீக சக்தியை உணர்கிறோமோ அந்த வீட்டில் கண்டிப்பாக முறையில் தெய்வம் நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அனைவரின் இல்லங்களிலும் தெய்வம் நிலைத்திருக்காது. யார் முறையாக தினமும் விளக்கேற்றி பூஜை செய்கிறார்களோ அந்த வீட்டில் தான் தெய்வம் நிலைத்திருக்கும். அப்படி தெய்வம் நிலைத்திருக்க நாம் செய்யக்கூடிய எளிமையான நித்திய பூஜையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நித்திய பூஜை என்பது தினமும் செய்யக்கூடிய பூஜை. எந்த வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டில் எந்தவித தீமைகளும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் விளக்கெரியும் வீடு பாலாய் போகாது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது வீணாகாது. எந்தவித கஷ்டங்கள் வந்தாலும் அதை சமாளித்து வெளியில் வந்துவிட முடியும் என்று கூறி இருக்கிறார்கள். எப்படி நாம் இந்த நித்திய பூஜையை எளிமையான முறையில் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

தினமும் வீட்டில் இருக்கக் கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்ற வேண்டும். தினமும் மலர்கள் சாற்ற இயலாது என்று நினைப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், விசேஷமான நாட்களிலும் மலர்களை சூட்ட வேண்டும். அப்படி சூட்டிய மலரை வாடியதும் தெய்வப்படத்தில் இருந்து எடுத்து விட வேண்டும். இதைத்தான் நிர்மால்யம் என்று கூறுவோம். காய்ந்த மலர்கள் எப்பொழுதும் ஸ்வாமி படத்தில் இருக்கக் கூடாது.

- Advertisement -

எந்தளவிற்கு நாம் பயபக்தியுடன் மலர்களை வைக்கிறோமோ அதே போல் தான் பயபக்தியுடன் இந்த மலர்களை எடுக்க வேண்டும். எடுத்த மலர்களை வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளில் போட்டு விடலாம் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும் இயன்றவர்கள் ஓடுகின்ற தண்ணீரில் போடலாம். அது மிகவும் சிறப்பு. அதேபோல் தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது ஒரே ஒரு விளக்கையாவது தினமும் சுத்தம் செய்து புதிதாக எண்ணெய், திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு.

அடுத்ததாக நம்முடைய வீட்டு பூஜை அறையில் பஞ்ச பாத்திரம் என்று இருக்கும். அதில் இருக்கும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். பழைய தண்ணீரை செடிகளில் ஊற்றிவிட்டு அதை சுத்தம் செய்து புதிதாக கைப்படாத சுத்தமான தண்ணீரை பிடித்து வைக்க வேண்டும். இயன்றவர்கள் அதில் சிறிது பச்சை கற்பூரம் துளசியை போட்டு வைக்கலாம்.

- Advertisement -

அதேபோல் நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை சுவாமிக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். டைமன் கற்கண்டு, உலர் திராட்சை, பேரிச்சம்பழம், ஏலக்காய் அல்லது தினமும் நாம் காய்ச்சும் பால் எச்சில் படுவதற்கு முன்பாகவே எடுத்து வைப்பது, பானகம் வைப்பது இப்படி நம்மால் இயன்ற ஏதாவது ஒன்றை சுவாமிக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு ஊதுபத்தி சாம்பிராணி போன்ற வாசனை மிகுந்த பொருட்களை நாம் விளக்கேற்றும் பொழுது பொருதி வைத்து விளக்கேற்றுவது சிறப்பு.

அதேபோல் நமக்கு தெரிந்த ஏதாவது மந்திரங்களையோ அல்லது பாடல்களையோ கூறி வழிபாடு செய்ய வேண்டும். மந்திரங்களும் பாடல்களும் தெரியாது என்பவர்கள் விளக்கேற்றும் சமயம் தெய்வீக பாடல்களை ஒலிக்கச் செய்து விளக்கேற்றுவது என்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க கிராம்பு பரிகாரம்
இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் தினமும் வீட்டில் பூஜை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் தெய்வத்தின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து நன்மைகளே நடைபெறும்

சற்று முன்