மனிதனுடைய வாழ்க்கையில் பல வகையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியது இந்த பண பிரச்சனை தான். என்ன தான் நம்மிடம் பிற செல்வங்கள் இருந்தால் நிறைவாக இருக்கும் என யோசித்தாலும் பணம் என்ற ஒன்று மட்டும் இல்லாது போனால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண் போல தான். அத்தகைய பணம் தட்டுப்பாடானது எப்பேற்பட்ட மனிதருக்கும் இருப்பது இயற்கை. ஆனால் ஒரு சிலருக்கு எப்போதுமே இந்த பண கட்டுப்பாடும் பண பிரச்சனையும் இருந்து கொண்டே இருக்கும்.
எத்தனை சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே தங்காது ஏதாவது ஒரு வகையில் வீண்விரையம் ஏற்பட்டு கொண்டே இருக்கும் இன்னும் சில இடங்களில் வருமானத்திற்கே வழியில்லாத நிலையில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதற்கான காரணம் பண வரவிற்கான ஈர்ப்பு தன்மை நம்மிடம் இல்லாதது ஒரு காரணம் என்றும் நம்முடைய கர்மபலன் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்து கொள்வதற்கான ஒரு அற்புதமான நாளாக இன்றைய நாள் திகழ்கிறது. அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீண்விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க
இந்த வழிபாட்டை இன்று மாலை செய்ய வேண்டும் செவ்வாய்க்கிழமை என்றாலே அங்கார காரகன் முருகப்பெருமான் என இப்படியான தெய்வங்களை வழிபடுவது தான் வழக்கம் இவைதான் அனைவரும் அறிந்தவைகள் ஆனால் இன்றைய மாலை பொழுதில் ஏகாதசி திதி துவங்குகிறது ஏகாதிசியானது பெருமாளுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இன்று மாலை துவங்கும் இந்த திதி நாளை மாலை வரை தொடர்கிறது இந்த நேரத்தில் நாம் பெருமாளை நினைத்து வழிபடும் பொழுது செல்வாதிபதியான பெருமாள் நம்முடைய பணப்பிரச்சனையை முற்றிலுமாக தீர்ப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த தீப வழிபாட்டு முறையைப் பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இன்று மாலை செவ்வாய்க்கிழமை பூஜை செய்பவர்கள் எப்போதும் போல அதை செய்து கொள்ளலாம்.
மாலை ஏழு முப்பது மணிக்கு மேல் இரவு உறங்குவதற்கு முன்பாக நாம் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றங்கள். நெய்வேத்தியமாக பால் வைத்தால் போதும். இந்த தீபம் எறியும் பொழுது தீபத்தை இரண்டு நிமிடம் நாம் உற்றுப் பார்க்க வேண்டும் அதாவது நம் கண்ணை கொஞ்சமும் சிமிட்டாமல் தீபத்தையே பார்க்க வேண்டும்.
அவ்வாறு தீபத்தை பார்த்து நாம் வணங்கும் பொழுது ஓம் நமோ நாராயணா என்ற இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் இந்த தீபமும் மந்திர வழிபாடும் செய்தால் போதும். பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய பணப்பிரச்சனைகள் தீர்வதுடன் பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை பிரசாதமாக வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:11 நாளில் கோரிக்கை நிறைவேற ஏற்ற வேண்டிய தீபம்
இந்த வழிப்பாட்டு முறை மிக மிக எளிமையானது தான் ஆனால் நாம் செய்யப்படும் இந்த நேரம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலும் மனதார வணங்கி நம்முடைய பணப்பிரச்சினைகளை போக்கி செல்வதுடன் வாழ்வதற்கான வழியை தேடிக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.