- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval11 நாளில் கோரிக்கை நிறைவேற ஏற்ற வேண்டிய தீபம்

11 நாளில் கோரிக்கை நிறைவேற ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்காக பல வழிகளில் தெய்வத்திடம் நாம் வேண்டுதல் வைப்போம். அப்படி கோரிக்கைகளோ வேண்டுதலோ வைக்கும் பொழுது அதில் எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறுவதற்கு என்று பல வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக கருதப்படுவது தான் தீப வழிபாடு. இந்த வழிபாட்டை நாம் முழு நம்பிக்கையுடன் செய்யும் பொழுது விரைவிலேயே நம்முடைய கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் 11 நாட்களில் கோரிக்கை நிறைவேறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

11 நாளில் கோரிக்கை நிறைவேற

தீபத்தில் அனைத்து விதமான தெய்வங்களும் இணைந்து இருப்பார்கள். மேலும் பஞ்சபூதத்தின் அடிப்படை தத்துவமும் இதில் அடங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் தான் எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபடுவதாக இருந்தாலும் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் அதன் பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் மனோவாஞ்சித தீபத்தை எப்படி ஏற்றி வழிபட்டால் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ செய்யலாம். எந்த நேரத்தில் முதல் நாள் வழிபாடு செய்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ச்சியாக 11 நாட்களும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை 11 நாட்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தங்களுடைய கர்ம வினைகளின் அடிப்படையிலோ அல்லது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களின் அடிப்படையிலோ 108 நாட்கள் வரை கூட செய்யலாம்.

இந்த வழிபாட்டிற்கு நெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை நான்கையும் சரிசமமாக வாங்கி வந்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீளம் இந்த ஐந்து நிறங்களில் திரியை வாங்கி ஐந்து நிறங்களும் கலந்து இருப்பது போல் ஒன்றாக திரித்து திரியாக பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

முதலில் உங்களுடைய கோரிக்கை என்னவோ அதை ஒரு பேப்பரில் எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தட்டை எடுத்து அந்த தட்டில் கோரிக்கை எழுதி வைத்திருக்கும் பேப்பரை வைக்க வேண்டும். அதற்கு மேல் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மற்றொரு புதிதாக வாங்கிய அகல் விளக்கை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் கலந்து வைத்திருக்கும் எண்ணெயை அதில் ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் திரியையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றும் போது உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கொள்ளுங்கள்.

இப்படித்தான் தினமும் தீபம் ஏற்று வழிபாடு செய்ய வேண்டும். தினமும் புதிய அகல் விளக்கை உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. முதல் நாள் மட்டும் புதிய அகல் விளக்கை பயன்படுத்தி மற்ற நாட்களில் அதே விளக்கில் தீபம் ஏற்று வழிபாடு செய்யலாம். இந்த தீபத்திற்காக நாம் நெய்வேத்தியம் வைக்க வேண்டும். நம்முடைய கோரிக்கை என்னவோ அதற்கேற்றார் போல் நெய்வேத்தியம் வைத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வெண்பொங்கலை தீபத்திற்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டோம் என்றால் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும். மிளகை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் அதிகார பதவி கிடைக்கும். அப்பத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும். வடைப்பருப்பு சுண்டலை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேங்காயை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் தன லாபம், வியாபார விருத்தி ஏற்படும். கருப்பு திராட்சையை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். இவற்றில் எது உங்களுடைய வேண்டுதலுக்கு உரியதாக திகழ்கிறதோ, அந்த பொருட்களை நெய்வேத்தியமாக தினமும் வைத்து வழிபாடு செய்யும் பொழுது உங்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைபெறும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: கனகதாரா மஹாலக்ஷ்மி பூஜை

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு மனதுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது மட்டுமல்லாமல் கர்ம வினைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்