- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுரு பகவானை வசியம் செய்யும் திலகம்

குரு பகவானை வசியம் செய்யும் திலகம்

- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை குரு பெயர்ச்சியானது நடக்கும். நம்முடைய ராசிக்கு நல்லது செய்யும் குரு பகவான் ஒரு வருடம் கழித்து வேறு ஒரு ராசிக்கு சென்று அமர்ந்துவிடுவார். இந்த குரு பகவான் நம்மை சாதகமாக பார்த்தால் பிரச்சனை இல்லை. ஆனால் பாதகமாக பார்த்தால் நம்முடைய கதை முடிந்தது. உங்களுடைய ஜாதக கட்டத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமாக வேலை செய்யவில்லை, வரக்கூடிய பணம் கைக்கு வந்து சேரவில்லை, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, வீட்டில் வறுமை, நிம்மதி இல்லை என்பவர்கள் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை நினைத்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் அந்த திலகத்தை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வியாழக்கிழமை அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஐந்தரை மணியில் இருந்து ஆறரை மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது மிக சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காலை 6 மணிக்கு முன்பு. இந்த பரிகாரத்திற்கு நமக்கு கொஞ்சம் குங்குமப்பூ மற்றும் கொஞ்சமாக வாசம் நிறைந்த தாழம்பூவும் தேவைப்படும்.

- Advertisement -

ஒரு சிட்டிகை குங்குமப்பூவை எடுத்து ஒரு கல்லில் வைத்து லேசாக அரைத்தால் பேஸ்ட் போல மாறிவிடும். அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது தாழம் பூ கொஞ்சம் போட்டு குழைத்து உங்களுடைய நெற்றியில் குரு பகவானை நினைத்து திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். குங்கும பூவுடன் சேர்ந்த திலகம் குரு பகவானே வசியம் செய்ய உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மட்டும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல வியாழக்கிழமை இந்த பரிகாரத்தை முடித்த பிறகு அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். மூன்று முதல் ஐந்து வாரம் வரை வியாழக்கிழமை அரச மரத்திற்கு தண்ணீரை ஊற்றி வேண்டும். ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு நிரம்ப தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து உங்கள் கையால் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த சொம்பிலிருந்து வரும் தண்ணீரை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். அரச மரத்தடியில் அந்த தண்ணீரை ஊற்றும் பொழுது உங்கள் கையை அந்த சொம்பின் வாய் பகுதியில் வைத்து ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரானது உங்கள் வலது கையின் உள்ளங்கையில் பட்டு அரச மர வேரிற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தண்ணீர் ஊற்றும் பொழுது குருபகவானின் ஆசி முழுமையாக கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். திலகத்தை வியாழக்கிழமைகளில் வாரம் தோறும் வைப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இத்தனை நாட்கள் தான் வைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் நம்ப முடியாத நிறைய அதிசயங்கள் நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உடனடியாக தீரும்.

இதையும் படிக்கலாமே பாவங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு

இந்த முறையில் திலகம் வைத்து அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்ற குரு பக பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

சற்று முன்