- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொன் பொருள் சேர சிவன் வழிபாடு

பொன் பொருள் சேர சிவன் வழிபாடு

- Advertisement -

சில பேர் எல்லாம் தங்களுடைய கடமைகளை சரிவர செய்வார்கள். கடினமாக உழைப்பார்கள். ஆனாலும் பொன் பொருள் தங்கம் வெள்ளி பணம் என்று இப்படி பொருள் சேர்க்கையானது சுத்தமாக இருக்காது. வருமானம் இருக்காது. கஷ்டப்பட்டது மட்டும்தான் மிஞ்சும். ஒரு சிலர் எல்லாம் தங்களுடைய கடமைகளை சரியாக செய்ய மாட்டார்கள். போனபோக்கில் வாழ்க்கையை நடத்துவார்கள். அலட்சியமாக இருப்பார்கள்.

ஆனால் அவர்களுடைய கையில் பொன் பொருள் தங்கம் வைரம் வெள்ளி வைடூரியம் பெயர் புகழ் அந்தஸ்து எல்லாம் தானாக வர தொடங்கும். இது எப்படி சாத்தியம். அவரவர் வாழ்க்கையில் இருக்கும் கர்ம வினைகள் தான் காரணம். அவர்கள் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப கடவுள் இன்றைக்க்காண வாழ்க்கை சூழ்நிலையை அமைத்துக் கொடுத்திருக்கின்றான். உங்களுடைய கர்ம வினைகள் ரொம்ப மோசமாக இருக்கிறதா.

- Advertisement -

எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பொன் பொருள் சேர்க்க முடியவில்லை, வீட்டில் இருக்கும் தங்க நகைகள் அடமானத்தில் இருக்கிறதா, அதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த சிவன் வழிபாடு உங்களுக்குத்தான். கர்ம வினைகளை குறைக்க வேண்டும் என்றால் சிவபெருமானின் பாதங்களை பற்றி கொள்வது மட்டும்தான் ஒரே வழி.

உங்களுடைய முயற்சிகளோடு சேர்த்து இந்த வழிபாட்டையும் செய்யுங்கள். தடைகள் தகர்க்கப்படும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். அடமானத்தில் வைத்திருக்கும் தங்க நகைகளை மீட்டு எடுக்கலாம். அடமானத்தில் இருக்கும் சொத்து பத்திரங்களையும் மீட்டெடுக்கலாம். நிம்மதியாக வாழலாம்.

- Advertisement -

பொன் பொருள் சேர்க்கை தரும் சிவன் வழிபாடு

வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள் சுத்தமான பச்சரிசி மாவு, கொஞ்சம் வெண்ணெய். கடைகளிலேயே இந்த பொருள் கிடைக்கும். இரண்டையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பச்சரிசியை போட்டு தேவையான அளவு வெண்ணெய் போட்டு பிசைந்து இதில் சிவலிங்கத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்.

மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல ஒரு லிங்கத்தை பிடித்து வெற்றிலையின் மீது வைத்து, அதற்கு மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூஜை அறையில் வையுங்கள். இந்த சிவபெருமானுக்கு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி 108 முறை வில்வ இலைகளாலோ, பூக்களாலோ அர்ச்சனை செய்து பொன் பொருள் சேர்க்கை வேண்டும், நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் குடும்பத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், அத்தனை ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

பொன் பொருள் சேர்க்கை இருக்கும். கஷ்டத்தில் நஷ்டத்தில் இருக்கும் உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வாழத் தொடங்கும். ஒரே ஒரு திங்கட்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு தயவு செய்து கோடி கணக்கில் பணம் கொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து 48 திங்கட்கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு நாம் பிடித்து வைத்த சிவலிங்கத்தை என்ன செய்வது?

செடி கொடிகளுக்கு கீழே போட்டு விட்டால் ஈ எறும்புகள் சாப்பிட்டுக் கொள்ளும். இதன் மூலம் உங்களுடைய கர்ம வினைகள் மேலும் குறையும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். முடிந்தால் இந்த சிவலிங்கத்தை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவன் கோவிலில் ஏதாவது ஒரு மரம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆடி 18 வாங்க வேண்டிய பொருட்கள்

அது அந்த ஸ்தல விருட்சமாக இருந்தாலும் சரி, அல்லது அந்த காம்பவுண்டை சுற்றி வைத்திருக்கும் மரமாக இருந்தாலும் சரி. அந்த மரத்துக்கு கீழே இந்த சிவலிங்கத்தை உதிர்த்து போட்டால் இன்னும் சிறப்பு தான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டை செய்யுங்கள். சிவனது ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்