- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி 18 வாங்க வேண்டிய பொருட்கள்

ஆடி 18 வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அதில் பல அற்புதமான சிறப்பு மிகுந்த நாட்கள் இருக்கும். இருப்பினும் அந்த ஆடி மாதத்தில் எந்தவித நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். தெய்வ வழிபாட்டிற்கே உகந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒரே ஒரு நாள் மட்டும் நாம் எந்த ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கிறோமோ அந்த காரியம் சிறப்பாக நடைபெறும் என்றும் அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய நன்மைகள் அனைத்தும் பல மடங்கு பெருகும் என்றும் கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட நாள் தான் ஆடி 18 ஆம் நாள். அதாவது அதை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். அந்த நாளில் எதை செய்தாலும் அது பெருகிக்கொண்டே செல்லும் என்பதால் தான் அதை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். இந்த ஆடிப்பெருக்கு நாள் அன்று வீட்டிற்கு வாங்கக்கூடிய முக்கியமான இரண்டு பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஆடி 18 வாங்க வேண்டிய பொருட்கள்

ஆடிப்பெருக்கு என்று காவேரி தாய்க்கு நன்றி கூறி காவேரி தாயை போற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒரு விழாவாக கருதப்படுகிறது. பெண்கள் பலருக்கும் அன்றைய தினம் தங்களுடைய தாலி கயிறை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறார்கள். அன்றைய தினம் தாலிக்கயிறை மாற்றி வழிபாடு செய்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதுமண தம்பதிகளாக இருப்பவர்கள் அன்றைய தினம் தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி செய்வார்கள்.

அதிலும் குறிப்பாக காவேரி கரையோரம் இருப்பவர்களுக்கு அன்றைய தினம் மிகவும் விசேஷகரமான திருவிழா போன்ற வைபவமே நடைபெறும் என்று கூட கூறலாம். ஆடிப்பெருக்கென்று நாம் வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அந்த பொருள் பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் வாங்கக்கூடிய மிகவும் முக்கியமான பொருளாக கருதப்படுவது தான் மஞ்சளும், உப்பும்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களை ஆடிப்பெருக்கு அன்று கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி செய்வதன் மூலம் வீட்டில் மங்களமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் அருகில் நதி இல்லாத பட்சத்தில் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம்.

ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, இரண்டு பூக்களை அதில் தூவி அதை நாம் நதியாக, புனித நீராக பாவித்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு அன்றைய தினம் நமக்கு கிடைக்கக்கூடிய பழங்கள், காப்பரிசி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.

வீட்டில் கிணறு இருக்கும் பட்சத்தில் கிணற்றடியில் வைத்து கூட இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். அப்படி கிணறு இல்லை என்பவர்கள் பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் தாலிக்கயிறை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் 12 மணிக்குள் மாற்றி விட வேண்டும். அன்றைய தினத்தில் வரக்கூடிய நல்ல நேரம் எது என்பதை பார்த்து அந்த நேரத்தில் கயிறு மாற்றிக் கொள்வது என்பது சிறப்பு.

இதையும் படிக்கலாமே:நன்மைகள் பெருக ஆடிப்பெருக்கு வழிபாடு
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். செய்வது எல்லாமே சிறப்பாக நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்