நாளைய தினம் ஆடி அமாவாசை. மற்ற அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் கூட, இந்த அமாவாசை திதி அன்று, முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தவறவிட்ட முன்னோர்கள் வழிபாட்டிற்கான பலனையும் முழுமையாக நமக்குப் பெற்றுத் தரக்கூடிய அமாவாசை இந்த ஆடி அமாவாசை.
ஜோதிட ரீதியாக சூரியனை தந்தை என்றும், சந்திரனை தாய் என்றும் சொல்லுவார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக சேரக்கூடிய நாள் தான் அமாவாசை. அதாவது மறைந்த தாய் தந்தையர்களை ஒரு சேர நினைத்து வழிபட உகந்த நாள். சூரிய பகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருக்கக்கூடிய நாள் தான் அமாவாசை.
அறிவியல் ரீதியாக பார்த்தால் மின்காந்த கதிர்வீச்சுகள் மாதங்களில் மற்ற நாட்களில் மேலிருந்து நோக்கி கீழே வருவதாக சொல்லப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் மட்டும் கதிர்வீச்சு கீழிருந்து மேலே செல்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் மேலோகத்தில் வாழக்கூடிய முன்னோர்களுக்கு இந்த அமாவாசை திதியில் திதி தர்ப்பணம் கொடுப்பதாகவும் ஒரு சிலரால் சொல்லப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை
நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் அமாவாசை சமையலை செய்ய தொடங்கவும். வீட்டில் இருக்கும் ஆண்கள் மறைந்த உங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், சிரார்த்தங்களை சரிவர செய்து விட வேண்டும். உங்கள் வீட்டு வழக்கப்படி இதை நீங்கள் செய்யலாம். ஆத்தங்கரைகள், குளக்கரைகள், ஏரிக்கரைகளில், சென்று சில பேர் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.
சில பேர் வீட்டிலேயே புரோகிதரை அழைத்து ஹோமம் செய்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் காரியங்களை செய்து நிறைவு செய்து கொள்வார்கள். அது அவரவர் வழக்கப்படி செய்து கொள்ளுங்கள். எந்த முறைப்படி நீங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்களை கொடுத்தாலும் ஒரு நன்றி உணர்வோடு, மனபூர்வமாக, திருப்தியாக செய்ய வேண்டும். அரைகுறை மனதோடு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அச்சச்சோ இவ்வளவு செலவாகிறது. இவ்வளவு பணம் கொடுத்து இந்த காரியத்தை செய்ய வேண்டுமா என்ற எண்ணம் எல்லாம் வரக்கூடாது.
உங்கள் கையளவுக்கு எவ்வளவு முடிகிறதோ, உங்கள் பொருளாதார நிலைக்கு, உங்கள் சக்திக்கு எவ்வளவு தூரம் உங்களால் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு செய்தால் போதும். இவ்வளவு ரூபாய் செலவு செய்து இவ்வளவு பொருட்களை வாங்கித் தான் திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
இந்த அமாவாசை திதி அன்று எங்களால் முன்னோர்களுக்கு எந்த வழிபாட்டையுமே செய்ய முடியவில்லை என்பவர்கள் கூட ஒரு கைப்பிடி கருப்பு எள் வாங்கிக் கொண்டு போய், ஒரு மரத்தடியில் போட்டு விட்டு, ஒரு ஐந்து சொம்பு தண்ணீரை அந்த மரத்தடியில் ஊற்றிவிட்டு முன்னோர்களை மனதார நினைத்து கும்பிட்டால் கூட முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்துவிடும். பொருளாதார ரீதியாக ஆடம்பரமாக தான் இந்த முன்னோர்கள் வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது அவசியம் கிடையாது என்பதை மீண்டும் பதிவு செய்து கொள்வோம்.
திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்
நாளை 4-8-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 க்கு முன்பாகவே திதி தர்ப்பன காரியங்களை நிறைவு செய்து கொள்ளவும். பிறகு மதியம் 1:30 மணிக்கு மேல் வீட்டில் இறந்தவர்களுக்கு படையல் போட்டு, வழிபாட்டை முடித்துவிட்டு, காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் உணவு சாப்பிட வேண்டும். நாளைய தினம் முன்னோர்களுக்காக சமைத்த உணவு பண்டங்களை வெளி ஆட்களுக்கு கொடுக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே: குறைவற்ற வாழ்க்கை வாழ வழிபாடு
நீங்கள் அன்னதானம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக தனியாக சமைத்த உணவு பண்டங்களை மட்டும்தான் அன்னதானம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த வழிபாடாக இருந்தாலும் சரி எந்த சாஸ்திரம் முறைகளாக இருந்தாலும் சரி மன நிறைவோடு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகள் தான் நிறைவான பலனைத் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சந்தைந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.