- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுறைவற்ற வாழ்க்கை வாழ வழிபாடு

குறைவற்ற வாழ்க்கை வாழ வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறைவும் இல்லாமல் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்றி கடினமாக உழைத்து அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருளாதாரத்தையும் பெறுவார்கள். என்ன தான் பொருளாதாரம் இருந்தாலும் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் குறைவில்லாத நிறைவான வாழ்க்கையை பெற வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் பரிபூரணமாக வேண்டும்.

கோடீஸ்வரர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்று தான் வரும். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறைகள் இருக்கத்தான் செய்யும். எந்தவித குறையும் இல்லாமல் இருக்கின்ற பொருட்களை வைத்து சந்தோஷமாக வாழ்வது என்பது மிகவும் அரிது. அப்படி குறைவில்லாத நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு திருஞானசம்பந்தர் கூறிய பதிகத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குறைவற்ற வாழ்க்கை வாழ வழிபாடு

நால்வர் என்று போற்றப்படுபவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் திருஞானசம்பந்தர். பராசக்தியிடம் ஞானப்பால் அருந்தி அனைத்து விதமான ஞானங்களையும் உணர்ந்தவராக இவர் திகழ்கிறார். இவர் பல சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை போற்றி பல பாடல்களை பாடி இருக்கிறார். அதனை நாம் பதிகம் என்று கூட கூறுவோம். அப்படி கூறக்கூடிய பதிகங்களை நாம் தினமும் வீட்டில் பாடும்பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் குறைவில்லாத நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு படிக்க வேண்டிய பதிகத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பதிகத்தை பஞ்சாக்ர திருப்பதிகம் என்று கூறுவோம். திருஞானசம்பந்தர் வாழ்வில் எந்தவித குறைவும் இல்லாமல் நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பாடுவதற்காகவே இந்த பதிகத்தை பாடியிருக்கிறார். இந்த பாடலை நாமும் தினமும் காலையிலோ, மாலையிலோ சிவபெருமானிற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்துவிட்டு முழு மனதோடு பாட நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி நிறைவான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

பதிகம்

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

பொருள்

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.

இதையும் படிக்கலாமேஆடி 18 வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த பதிகத்தில் மொத்தம் பதினோரு பாடல்கள் இருக்கும். இந்த 11-ல் முதல் பாடலாக திகழ்வதுதான் மேலே கூறிய பாடல். 11 பாடல்களையும் பாட இயன்றவர்கள் தினமும் பாராயணம் செய்யலாம். அப்படி 11 பாடல்களையும் பாட முடியாத பட்சத்தில் இந்த ஒரு பாடலை மட்டும் தினமும் சிவபெருமானை நினைத்து மனதார பாடிவர வாழ்க்கையில் எந்தவித குறைவும் இல்லாத நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்