- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல நன்மைகள் தரும் ஆடி அமாவாசை

சகல நன்மைகள் தரும் ஆடி அமாவாசை

- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. புராணங்களிலும் ஆடி அமாவாசைக்கு பற்றி சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட ஆடி அமாவாசை தினத்தன்று நாம் சில வழிமுறைகளை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி அமாவாசை என்பது வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. எந்த அமாவாசையில் நாம் முன்னோர்களை வழிபடுகிறோமோ இல்லையோ ஆடி அமாவாசையில் கண்டிப்பான முறையில் முன்னோர்களை நாம் வழிபட வேண்டும். முன்னோர்களுக்காக நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் நர்கதி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் அவர்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

மகாபாரதத்தில் மகாவிஷ்ணு தர்ப்பணம் செய்வதைப் பற்றியும் கூறியிருக்கிறார். அப்படி கூறும் பொழுது ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருகளின் பாவம் நீங்கும் என்று கூறியிருக்கிறார். அதேபோல் கருட புராணத்தில் எள் கலந்த நீரை இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இப்படி கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும், வெற்றி உண்டாகும், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் அழிவார்கள், பூர்வீக சொத்து சேர்க்கை உண்டாகும், நீண்ட ஆயுள் ஏற்படும், வம்சம் விருத்தியடையும், சகல நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதோட மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு நாம் படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். அப்படி எல்லா அமாவாசையும் செய்யாவிட்டாலும் ஆடி அமாவாசை கண்டிப்பான முறையில் படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும் இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு காகத்திற்கு உணவளிக்க வேண்டும். காகத்திற்கு உணவளித்த பிறகுதான் வீட்டில் இருப்பவர்கள் உண்ண வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்போது ஆடி அமாவாசை தினத்தன்று சில வழிமுறைகளை நாம் மேற்கொள்ளும் பொழுது முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றைப் பற்றி பார்ப்போம். முன்னோர்களுக்கு நீர் கடன் செலுத்த வேண்டும். இப்படி செலுத்துவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இதனால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

மேலும் அன்றைய தினம் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு தானம் அளித்தல், நீர்தானம் அளித்தல், பானகம், மோர், ஆடை தானம் அளிக்க வேண்டும். கல்வி செல்வம் கிடைக்காமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய வேண்டும். உடல்நலம் குறைந்த முதியவர்களுக்கு அல்லது ஆதரவற்ற நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுப்பது என்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே செல்வம் சேர குபேர பூஜை

இவை அனைத்துமே ஆடி அமாவாசை தினத்தில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆடி மாதம் முடிவதற்குள் நாம் செய்தாலே நமக்கு சகல விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தங்களால் இயன்ற ஏதாவது ஒன்றை முழுமனதோடு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும். நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்