ஆடி அமாவாசை என்றதும் பலரும் பித்ருகளை வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பித்ருகளை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாகவும் உகந்த நாளாகவும் ஆடி அமாவாசை கருதப்படுகிறது. அதே சமயம் தெய்வ வழிபாட்டையும் நாம் மேற்கொள்ளும் பொழுது நமக்கு பல அளப்பரியாத பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு தெய்வ வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி அமாவாசை வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து மேற்கொண்டு வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எந்த கஷ்டமும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் கூட ஆடி அமாவாசை தினத்தன்று இந்த முறையில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று நாம் செய்யக்கூடிய புண்ணியங்கள் அனைத்தும் நமக்கு நன்மையை தரும். அதனால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கோவில்களாக இருந்தாலும் சரி அம்மன் ஆலயமாக இருந்தாலும் சரி அல்லது சிவன் ஆலயமாக இருந்தாலும் சரி ஆடி அமாவாசை தினத்தன்று அந்த கோவிலுக்கு சென்று கூழ் ஊற்றுவது என்பது மிகவும் சிறப்பு. அப்படி கூழ் ஊற்ற முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அந்த கோவிலில் வீற்றிருக்கக் கூடிய தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்ய வேண்டும் அல்லது கோவில்களில் இருக்கக்கூடிய பலிபீடத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் அஸ்திர பூஜை என்று கூறுவார்கள் தெய்வத்திடம் இருக்கக்கூடிய ஆயுதத்திற்கு செய்யக்கூடிய பூஜை. இந்த பூஜைகளில் ஏதாவது ஒரு பூஜையை நாம் செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும்.
இந்த பூஜைகளையும் அல்லது அன்னதானத்தையோ செய்ய இயலவில்லை என்று நினைப்பவர்களும், அதை செய்வதற்கு கூட தங்களிடம் வருமானம் இல்லை என்று வருத்தப்படுபவர்களும் நாளைய தினம் கோவிலுக்கு சென்று கோவில் கோபுரத்தை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். பிறகு நேராக உள்ளே சென்று கொடி மரத்திற்கு முன்பாக மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். அடுத்ததாக சுவாமிக்கு முன்பாக இருக்கக்கூடிய மண்டபத்தில் நின்று சுவாமியை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.
இப்படி இந்த மூன்று இடங்களிலும் உங்களுடைய வேண்டுதலை நீங்கள் முன்வைத்து அந்த தெய்வத்தை வழிபாடு செய்தீர்கள் என்றால் உங்களுடைய வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் நீங்கி சுபிக்ஷம் பெற குலதெய்வ தீபம்
மிகவும் சூட்சுமமான இந்த வழிபாட்டை நாளைய தினம் மேற்கொள்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் படிப்படியாக நீங்குவதோடு ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.