- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீண் விரயத்தை குறைத்து பணவரவை அதிகரிக்க பரிகாரம்

வீண் விரயத்தை குறைத்து பணவரவை அதிகரிக்க பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கிறோம். சம்பாதித்த பணம் அனைத்தும் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகி கொண்டு தான் இருக்கிறது. சுப செலவுகளாக இருக்கும் பட்சத்தில் அதனால் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் பலருக்கும் வீண் விரயங்கள் ஏற்படும். மாதத் தொடக்கத்தில் வரும் சம்பளத்தை வைத்து இதை செய்யலாம் அதை செய்யலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்போம். ஆனால் திடீரென்று எதிர்பாராமல் வேறு ஏதாவது ஒரு செலவு வந்து நம்முடைய திட்டங்கள் அனைத்தையும் பாழாக்கிவிடும். அப்படி ஏற்படக்கூடிய தேவையற்ற வீண் செலவுகளை குறிப்பதற்கு மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவை அதிகரிக்க பரிகாரம்

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்குரிய அம்சங்களை நாம் வீட்டில் வைத்திருப்பது மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்துவிட்டால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். முக்கியமாக நமக்கு வந்த பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். இதற்கு பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றுள் ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும். மாதத்தில் ஒரு நாள் மட்டும் வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டோம் என்றால் அந்த மாதம் முழுவதும் நமக்கு வீண்விரயம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இதற்கு நமக்கு ஒரு சிவப்பு நிற துணி வேண்டும். அடுத்ததாக இரண்டு சோழிகள் வேண்டும்.

சோழி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. பொதுவாகவே சோழி இருக்கும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு சோழிகளை வாங்கி சுக்கிர ஹோரையில் சிவப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி அதை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த மூட்டையை நீங்கள் பணம் வைக்கும் பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

தொழில் செய்யும் ஸ்தாபனமாக இருக்கும் பட்சத்தில் கல்லாப்பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணவரவு என்பது அதிகரிக்கும். அதே சமயம் வீண்விரயங்களோ தேவையற்ற செலவுகளோ எதுவும் ஏற்படாமல் அந்த பணமானது சேமிப்பாக உயர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: ஜென்ம நட்சத்திரத்தின் பலனை பெற வழிமுறை

மிகவும் எளிமையான இந்த தாந்த்ரீக பரிகாரத்தை மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு வீண்விரயம் தவிர்க்கப்படும், பணவரவு அதிகரிக்கும், சேமிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்