- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஜென்ம நட்சத்திரத்தின் பலனை பெற வழிமுறை

ஜென்ம நட்சத்திரத்தின் பலனை பெற வழிமுறை

- Advertisement -

ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறக்கிறது என்றால் அது பிறக்கின்ற நேரத்தை பொருத்தும் நாளை பொருத்தும் அந்த உயிருக்கு உரிய ஜென்ம நட்சத்திரம், ஜென்ம ராசி உருவாகும். பலரும் ராசியை மட்டுமே வைத்து பலனை பார்ப்பார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான காரியங்களுக்கும் அவர்களுடைய ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம், ஜென்ம லக்னம் போன்றவை ஒருவித காரணமாக அமைகின்றன.

அந்த ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் மற்றும் ஜென்ம லக்னத்திற்குரிய முழுமையான பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்குரிய பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஜென்ம நட்சத்திரத்தின் முழுமையான பலனைப் பெற செய்யக்கூடிய வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஜென்ம நட்சத்திரத்தின் பலனை பெற வழிமுறை

ஒவ்வொரு ராசிக்கும் மூன்று நட்சத்திரங்கள் என்று வரும். ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று நான்கு பாதங்கள் இருக்கின்றன. அந்த பாதங்களை பொறுத்துக் கூட பலன்கள் வேறுபடும். அதேபோல் ஜென்ம லக்னம் என்ன என்பதை அறிந்தும் நாம் பலனை பார்க்க வேண்டும். இப்படி இவை அனைத்தையும் ஒருசேர பார்த்தால்தான் ஒருவருடைய ஜாதகத்தின் பலன் முழுமை பெறும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

ஜென்ம ராசி என்றதும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன. அதேபோல்தான் நட்சத்திரத்திற்கும், லக்னத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். நட்சத்திரத்தை பொருத்தவரை எந்த நட்சத்திரத்தில் நாம் பிறந்திருக்கிறோமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நற்பலன்கள் நமக்கு கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் அதற்காக சில வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்திற்கு என்று மரங்கள் இருக்கின்றன. யார் ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாரோ அந்த நட்சத்திரத்திற்குரிய மரக்கன்றை வாங்கி சிவன் கோவிலில் நட்டு அதை பராமரித்து நன்றாக வளர்த்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கையும் செழிப்புடன் மாறும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் அன்று அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் அந்த நட்சத்திரத்திற்குரிய மரம் எங்கு இருக்கிறது என்பதை அறிந்து வைத்துக் கொண்டு அந்த மரத்திடம் ஜென்ம நட்சத்திர நாள் வரும் பொழுது அமர்ந்து தியானம் செய்வதும் தங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும்

அஸ்வினி – காஞ்சிதை (எட்டி)
பரணி – நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோஹிணி – நாவல்
மிருகஷீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்பூசம் – மூங்கில்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – ஆலமரம்
பூரம் – பலா
உத்திரம் – அலரி
ஹஸ்தம் – அத்தி
சித்திரை – வில்வம்
சுவாதி – மருத மரம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழம்
கேட்டை – பராய்
மூலம் – மராமரம்
பூராடம் – வஞ்சி
உத்திராடம் – பலா
திருவோணம் – வெள்ளெருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி – தேம மரம்
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை

இதயம் படிக்கலாமே:வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்க அரச மர பரிகாரம்

இந்த எளிமையான வழிமுறைகளை யார் ஒருவர் மாதாமாதம் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் அன்று பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு செழிப்பான நல்ல வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்