- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதெரியாமல் கூட கோவிலுக்கு இந்த பொருளை எடுத்துச் செல்லாதீர்கள்

தெரியாமல் கூட கோவிலுக்கு இந்த பொருளை எடுத்துச் செல்லாதீர்கள்

- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நல்ல காலம் பிறக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகள் செய்வார்கள். அப்படி வழிபாடுகள் செய்யும் பொழுது இறைவனின் அருள் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அந்த வழிமுறைகளால் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும். அந்த வழிமுறைகள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கோவில் வழிபாடு முறை

தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் என்பது ஏற்படும். அது நல்ல விளைவுகளாகவும் இருக்கலாம். எதிர்மறை விளைவுகளாகவும் இருக்கலாம். அதனால் நாம் வழிபாடு செய்யும்பொழுது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாம் அணிந்து செல்லும் ஆடை முதற்கொண்டு நம் தலையில் வைத்திருக்கும் ஹேர் பின் வரை நமக்கு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பெண்கள் ஆலயத்தில் செய்யக்கூடிய சில காரியங்களால் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பெண்கள் எந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்கிறார்களோ அந்த தெய்வத்திற்கு பிடித்தமான நிறத்தில் ஆடை அணிந்து செல்ல வேண்டும். முக்கியமாக கருப்பு நிறத்தை உபயோகப்படுத்த கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் பலரும் தலைவிரி கோலமாக கோவிலுக்கு செல்கிறார்கள். அப்படி செல்வது என்பது மிகவும் தவறான ஒன்று. தலையை பின்னி தான் செல்ல வேண்டும்.

- Advertisement -

மேலும் தலையில் ஹேர் பின் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமும் நமக்கு பாதிப்புகள் என்பது ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பல பூஜைகள் செய்யும் பொழுது இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவும் நம்முடன் இருக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அங்கு சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கருப்பு நிறமும் அதற்குரிய காரணமே. இதே போல் தான் தலைவிரி கோலமாக நாம் செல்லும் பொழுது நம் தலையில் இருக்கக்கூடிய முடியானது கோவில் ஆலயத்தில் விழுந்துவிடும். நம் தலை முடியின் நிறம் என்ன? கருத்து. முடி மற்றும் கருப்புக்குரிய கிரகம் யார்? சனி பகவான். அப்பொழுது அவர் நம்மை பின்தொடர்ந்து வந்து விடுவார். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கும் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் நேரம் நல்ல நேரமாக மாற வேண்டும் என்பதற்காகவும் ஆண்களின் துணிகளை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு செல்வார்கள். அதுவும் முற்றிலும் தவறான ஒரு செயலாகும். ஆண்கள் அணிந்திருந்த துணியை எடுத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வருவது என்பது மிகவும் பாதகமான ஒரு சூழ்நிலைக்கு நம்மையும் அந்த நபரையும் ஆளாக்கும் என்று கூறப்படுகிறது.

உபயோகப்படுத்திய துணி என்பது சனிபகவானிற்குரிய காரனகத்துவம் என்பதால் எடுத்துச் சென்ற பெண்களுக்கும் அந்த துணிக்குரிய நபருக்கும் கஷ்டங்கள் என்பது அதிகரிக்கும். இதற்கு மாறாக அவர்களின் தலையெழுத்து மாற வேண்டும், நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது அங்கு சென்று கும்பாபிஷேகத்தில் தெளிக்க கூடிய தீர்த்தத்தை வாங்க வேண்டும். இப்படி வாங்குவதன் மூலமோ அல்லது அவர்களின் மீது தெளிப்பதன் மூலமோ அவர்களுக்கு இருக்க கூடிய கஷ்ட காலம் என்பது நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பிரம்மாண்ட வெற்றி பெற முருகன் வழிபாடு

பலரும் ஆண்களுக்கும் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் துணிகளை எடுத்துக் கொண்ட ஆலயம் ஆலயமாக செல்வார்கள். அப்படி சென்றும் அவர்களின் நிலை மாறவில்லை என்றால் அதற்கு இதுதான் காரணம். காரணமறிந்து செயல்பட்டால் தான் அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்