- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரம்மாண்ட வெற்றி பெற முருகன் வழிபாடு

பிரம்மாண்ட வெற்றி பெற முருகன் வழிபாடு

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறிக்கோளை முன் வைத்து தான் செயலாற்றுவோம். அப்படி முன்வைத்து நாம் செயலாற்றும்பொழுது அந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் மனதுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக கடினமாக உழைப்போம். இப்படி உழைக்கும் பொழுது நாம் அந்த வெற்றியை பெற வேண்டும் என்னும் பட்சத்தில் முருகப்பெருமானுக்கும் நாம் விரதம் இருக்க வேண்டும். இப்படி முருகப்பெருமானுக்கு நாம் விரதம் இருந்து அந்த முயற்சிகளை செய்யும்பொழுது அந்த முயற்சியில் ஏற்படக்கூடிய வெற்றியானது மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரம்மாண்ட வெற்றி பெற முருகன் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் தெய்வங்களின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். தெய்வங்களின் அருள் இருந்தால் மட்டுமே தான் நம்மால் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை அடைய வேண்டும். அந்த வெற்றியை பெறுவதற்கு தெய்வ வழிபாடு செய்வதோடு நம்முடைய கடினமான உழைப்பையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மையே. அப்படி நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை முருகப்பெருமானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று தொடங்க வேண்டும். காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்டு விட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்ற முருக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முருக வழிபாட்டை மேற்கொண்ட பிறகு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்று மாலை 6 மணிக்கு மறுபடியும் வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானுடைய பாடல்களை பாடி வழிபாடு செய்து விட்டு ஒரு மஞ்சள் துணியில் உங்கள் கையில் இருக்க கூடிய ஏதாவது ஒரு காணிக்கையை முடிந்து முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒன்பதாவது வாரம் காலையில் கோவிலுக்கு செல்லாமல் மாலையில் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு நாம் முடிந்த வைத்திருக்கும் அந்த 9 காணிக்கையும் எடுத்துக்கொண்டு முருகன் ஆலயத்திற்கு சென்று முருக பெருமானின் உண்டியலில் அந்த காணிக்கையை போட்டு விட வேண்டும். இப்படி நாம் எந்த ஒரு காரியத்தை நினைத்து முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கிறோமோ அந்த காரியம் வெற்றி அடையும் என்பதோடு மட்டுமல்லாமல் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பல நன்மைகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் ஆடி மூன்றாம் செவ்வாய் பரிகாரம்

முருகப்பெருமானின் இந்த வழிபாட்டை முழு மனதுடன் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்