- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பூரத்தன்று வாங்க வேண்டிய 3 மங்களப் பொருட்கள்.

ஆடிப்பூரத்தன்று வாங்க வேண்டிய 3 மங்களப் பொருட்கள்.

- Advertisement -

ஆடி மாதம் அம்பாள் வழிபாடு பருவ மழையை மட்டும் கொடுக்காது. நம்முடைய வீட்டில் செல்வ மழையையும் பொழிய செய்யும். அம்பாள் மனதை குளிர வைக்க மூன்று முக்கியமான பொருட்கள் இருக்கிறது. அதை நாளைய தினம் அம்பாள் முன்பு வாங்கி வைத்து வழிபாடு செய்தாலே போதும் அம்மனின் மனம் மகிழ்ச்சியடையும், நம்முடைய வீட்டில் செல்வம் மழை கொட்டும். அந்த வகையில் நாளைய தினம் நம்முடைய வீட்டில் அம்பாளுக்கு முன்பாக வைத்து வழிபட வேண்டிய 3 முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு.

ஆடிப்பூரத்தஞ்சு வாங்க வேண்டிய 3 மங்களப் பொருட்கள்

நாளைய தினம் அம்பாளுக்காக வாங்க வேண்டிய பொருட்கள் காதோலை கருகமணி, கண்ணாடி வளையல், மருதாணி. நாளைக்கு அம்பாளுக்கு வளைகாப்பு என்பதால் நிச்சயம் வளையல் வாங்க வேண்டும். வளைகாப்பு திருமணம் போன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய பொருள் மருதாணி.

- Advertisement -

அம்பாளுக்கு நாளைய தினம் இந்த மருதாணியை வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த மருதாணியை எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் இட்டுக் கொள்ளலாம். மருதாணி இலையாக வைத்து வழிபாடும் செய்தாலும் சரி, மருதாணியை அரைத்து விழுதாக வைத்து வழிபாடு செய்தாலும் சரி, அது உங்களுடைய சௌகரியம். காதோலை கருகமணி இது மங்கள பொருட்களில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பொருள்.

தங்கம் வெள்ளியை விட இந்த பொருளுக்கு மதிப்பு அதிகம். சரி இதை எதற்காக அம்பாளுடைய வழிபாட்டில் வைக்க வேண்டும். காதோலை கருகமணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது. அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்தான் என்ன அதையும் இந்த நல்ல நாளில் நாம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அந்தக் காலத்தில் தங்கம் எல்லாம் கிடையாது. தாலிக்கு பதில் இந்த பண ஓலையால் செய்யப்பட்ட தாலியை தான் பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்தார்கள். காய்ந்த பண ஓலையில், இன்னாருடைய மகனை, மகளை இன்னாருக்கு திருமணம் செய்து வைத்ததாக எழுதி அதை சுருட்டி கயிறில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். பண ஓலைக்கு இன்னொரு பெயர் தான் ‘தாள ஓலை’. தாள ஓலையில் செய்ததால் தான் அதை தாலி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாலி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்தான் பண ஓலை. இந்த பண ஓலையோடு சேர்த்து கருகமணியையும் தாலியோடு இணைத்து அந்த காலத்தில் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள்.

அடுத்தபடியாக, இந்த பண ஓலையில் செய்யப்பட்ட கம்பளை தான் காதில் அணிந்து வந்தார்கள். காது குத்திய பிறகு அந்த ஓட்டையில் பனை ஓலையை சுருட்டி சொருக்கி வைத்துக் கொள்வார்கள். காது ஓட்டை பெருசாக ஆக அந்தப் பண ஓலையை விரித்தபடி சுருட்டி காதில் மாட்டிக் கொள்வார்கள். இதுதான் அந்த காலத்து கம்பல். தாள ஓலையில் செய்த ‘காது ஓலை, காதோலை’.

- Advertisement -

ஓலையில் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு அந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுத்தது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த விஷயங்களை எல்லாம் அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறையினர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான், இந்த பொருட்களை எல்லாம் அம்பாள் வழிபாட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினருக்கு இந்த காதோலை கருகமணி என்றால் என்ன என்பதை தெரியாது. ஆனால் ஒரு சில சமுதாயத்தினர் இன்றும் அம்பாள் வழிபாட்டிற்கு இந்த பொருட்களை வாங்கி வைக்கக்கூடிய வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். நாட்டு மருந்து கடைகளில், பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் இந்த காதோலை கருகமணி செட் அப்படியே விற்கிறது.

ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் காதோலை, கருகமணிக்கு பதிலாக கருப்பு வளையல், மரத்தால் செய்யப்பட்ட சீப்பு, சின்ன கண்ணாடி இவைகளை விற்கிறார்கள். அதை வாங்கி அம்பாளுக்கு வைத்து பூஜை செய்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டில் செல்வ செழிப்பு உயரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.

இதையும் படிக்கலாமே: ஆடிப்பூரம் அம்பாள் வலைக்காப்பை வீட்டில் நடத்துவது எப்படி?

அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தான் இறைவனுக்கும் படைத்து வழிபாடு செய்தார்கள். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் தானே இறைவனின் அம்சத்தை பார்த்தார்கள். அதனால் தான் அவர்கள் வழிபாட்டில் இப்படிப்பட்ட பொருட்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் நாளைய தினம் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்