- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பூரம் அம்பாள் வலைக்காப்பை வீட்டில் நடத்துவது எப்படி?

ஆடிப்பூரம் அம்பாள் வலைக்காப்பை வீட்டில் நடத்துவது எப்படி?

- Advertisement -

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்திற்கு காத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆடிப்பூரம் அன்று அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆடிப்பூரம் நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு செய்தால், அடுத்த வருடத்திற்குள் உங்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பெண்ணுடைய கையில் வளைகாப்பு வலையில் இருக்கும்.

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண்கள், அம்பாளுக்கு போட்ட வளையலை, நாளை அவர்கள் கையில் போட்டுக் கொண்டால், திருமணமாகாத அந்த பெண்ணினுடைய கையில், அடுத்த வருடம் திருமண வளையல் நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடு தான் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு செய்யக்கூடிய வளைகாப்பு வழிபாடு.

- Advertisement -

நிறைய கோவில்களில் அம்பாளுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு வளைகாப்பு நடத்தப்படும். அதேபோல நம்முடைய வீட்டிலும் அம்பாளுக்கு வளைகாப்பு செய்யலாம். இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் வளைகாப்பு செய்தால் உங்களுடைய குடும்பம் பல தலைமுறைகளுக்கு தழைத் தோங்கி இருக்கும் என்பது நம்பிக்கை. வளைகாப்பை அம்பாளுக்கு எப்படி வீட்டில் செய்வது? ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வீட்டில் இருக்கும் அம்மனுக்கு வளைகாப்பு செய்வது எப்படி?

இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி, மாலை 6:41 மணிக்கே பூரம் நட்சத்திரம் பிறந்து வருகிறது. நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9:03 மணி வரை பூரம் நட்சத்திரம் இருக்கிறது. நாளைய தினம் தான் ஆடிப்பூரம். நாளை காலை 6:15 – 7:15, 9:15 -10:15 இந்த நேரத்தில் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். காலை நேரத்தை தவறவிட்டவர்கள், நாளை மாலை 6:30 – 7:30 மணி வரை அம்பாளை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

நாளைக்கு உங்களுடைய வீட்டிலேயே அம்பாளுக்கு எப்படி வளைகாப்பு செய்வது. பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். ஒரு மரத்தால் செய்யப்பட்ட மனப்பலகை போட்டு, அதில் அம்பாளின் திருவுருவ படத்தை வைக்கவும். அம்பாளின் சிலை இருந்தால் அதற்கும் வழிபாட்டை மேற்கொள்ளலாம் அம்பாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு உங்கள் கைகளால் வளையல் மாலை கட்டி போடவும்.

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு கலவை சாதத்தை நெய் வைத்தியமாக வையுங்கள். அம்பாளிடம் குடும்பத்தோடு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எங்களுடைய சந்ததி தழைத்தோக வேண்டும். எங்கள் வீட்டு பிள்ளைக்கு குழந்தை பேரு கிடைக்க வேண்டும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துவிட்டு, கற்பூர ஆராத்தி காண்பித்து பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு மாதமாக இருக்கக்கூடிய பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு செய்வோம். அதேபோல தான் அம்பாளுக்கும் நாளை வளைகாப்பு செய்யணும். வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அந்த அம்பாளின் திருவுருவப்படத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அம்பாளை அமர வைத்த மனப்பலகை இருக்கும் அல்லவா. அந்த மனப்பலகைக்கு மேலாக திருமணமாகாத பெண்னை அமர வைத்து நலுங்கு வைத்து அம்பாளை வேண்டிக் கொண்டால் அந்த பெண்ணுக்கு சீக்கிரம் திருமணம் நடந்து விடும்.

திருமணம் ஆகி குழந்தை இல்லாத பெண்ணை அந்த மனப்பலகையில் அமர வைத்து நலுங்கு வைத்து அம்பாளுக்கு போடப்பட்ட வளையல் மாலையை எடுத்து அந்த பெண்ணினுடைய கையில் போட்டு வளைகாப்பு நடத்தினால் அந்த பெண்ணுக்கு அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். இதுதான் இந்த வழிபாட்டில் இருக்கக்கூடிய நம்பிக்கை.

உங்க வீட்டில் இந்த வழிபாட்டை செய்து விட்டீர்கள். உங்கள் வீட்டு பக்கத்து வீட்டுப் பெண், உங்களுக்கு தெரிந்த பெண்ணாக இருக்கலாம். அந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியமில்லை, திருமணம் நடக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த பெண்ணை உங்கள் வீட்டிற்கு அழைத்து, நீங்கள் அம்மனுக்கு வளைகாப்பு செய்த மனப்பளகையின் மீது அமர வைத்து கூட பிரார்த்தனை வைக்கலாம். வேண்டுதல் என்பது நமக்காக மட்டும் கிடையாது.

அடுத்தவர்களுக்கு நல்லது நிடக்கவும் பிரார்த்தனை வைக்கலாம். நாளைய தினம் மன நிறைவோடு அடுத்தவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. உங்கள் சொந்தக்கார பெண்ணுக்கு, குழந்தை பிறக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும் என்றும் நீங்கள் உங்கள் வீட்டில் அம்பாளுக்கு போட்ட வளையலை கொண்டு போய் அடுத்தவர்களுக்கு தானம் செய்வது என்பது அபரிவிதமான பலனை உங்கள் குடும்பத்திற்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஆடிப்பூரம் 2024 அம்பாள் வழிபாடு

நீங்கள் உங்கள் வீட்டு அம்பாள் கழுத்தில் போட்ட வளையலை எடுத்து நாலு பேருக்கு தானம் செஞ்சு பாருங்க. உங்க குடும்பத்துக்கு நிச்சயம் நல்லது நடக்கும். நாளைய தினம் வீட்டில் இருந்தபடியே மேல் சொன்ன முறைப்படி அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துங்கள் உங்கள் குடும்பம் எந்தவித குறையும் இல்லாமல் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்