நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளை செய்திருப்போம். அந்த தவறுகளால் பல நாள் நமக்கு பல பிரச்சினைகள் வந்திருக்கும். இந்த பிரச்சனை வருவதற்கு காரணமான செயல் என்ன என்று தெரியாமலேயே அந்த பிரச்சினையில் இருந்து விடுபட முடியாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். அப்படி ஒவ்வொரு கிழமையும் செய்யக்கூடாத செயல்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்கள் அதிபதியாக திகழ்கின்றன. அந்த கிரகங்களுக்கு எதிரான செயல்களை அந்த கிழமையில் நாம் செய்யும்பொழுது அதனால் நமக்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இயலாவிட்டாலும், முக்கியமானதை தெரிந்து கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய கிழமை அந்த நாளில் சனிபகவானுக்குரிய இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நாம் வாங்கினோம் என்றால் நம் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். உறவுகள் கெடுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். திங்கட்கிழமை என்பது சோமவாரமாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் யார் வீட்டிற்கும் சென்று துக்கம் விசாரிக்க கூடாது. கைபேசி மூலமாக கூட துக்கம் விசாரிக்க கூடாது. அதையும் மீறி விசாரித்தோம் என்றால் நம் குடும்பத்தில் கஷ்டங்கள் என்பது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
செவ்வாய்க்கிழமை என்பது மங்கள காரகனுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அன்று வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டக்கூடாது. கழட்டி சுத்தம் செய்யக்கூடாது. இப்படி செய்வதன் மூலம் வீட்டின் இருக்கக்கூடிய செல்வங்கள் குறைய ஆரம்பிக்கும். புதன்கிழமை என்பது புதன் பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அன்று கண் சிகிச்சை எதுவும் செய்யக் கூடாது. அதையும் மீறி செய்தால் குடும்பத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அன்று பித்ரு நிந்தனை கூடாது. அதாவது நம்முடைய முன்னோர்களை நாம் திட்டக்கூடாது. இறந்த முன்னோர்களை எப்பொழுதுமே நாம் திட்டக்கூடாது. அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை இறந்த முன்னோர்களை பற்றி இப்படி செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்று குறை கூறக்கூடாது. அப்படி செய்தோம் என்றால் நம் குலத்திற்கே சாபம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு திருஷ்டி சுத்த கூடாது. அப்படி சுற்றினால் மகாலட்சுமியின் கடாட்சம் என்பது வீட்டில் இருந்து நீங்கிவிடும். சனிக்கிழமை என்பது சனி பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதால் அன்று கடன் வாங்க கூடாது அப்படி வாங்கினால் வீட்டில் தரித்திரம் அதிகரிக்கும். இப்படி பல செயல்களை நாம் கூறிக் கொண்டே செல்லலாம். முக்கியமான சில செயல்களை மட்டுமே தான் இதில் நாம் பட்டியலிட்டு இருக்கிறோம். இயன்றவர்கள் இந்த செயல்களை செய்யாமல் இருந்து தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீக்கிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே ஒழுக்கமான நல்ல பிள்ளைகளை பெற
இதுவரை தெரியாமல் இந்த செயல்களை செய்திருந்தாலும் இனிமேல் இந்த செயல்களை செய்யாமல் இருந்தால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அதிகரிக்காமல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.