இன்று வளர்பிறை அஷ்டமி திதி. பைரவரை நினைத்து வழிபாடு செய்தால், உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும். அஷ்ட ஐஸ்வரியம் பெருகும். இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியேவும் இந்த வழிபாட்டை செய்யலாம், அல்லது கோவிலுக்கு சென்றும் இந்த வழிபாட்டை செய்ய முடியும் என்பவர்கள் செய்யலாம். உங்களுடைய பணத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவை 1 எலுமிச்சம்பழம். அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனா வைத்து 369 என்ற நம்பரை எழுதி விடுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை பைரவரிடம் வைக்க வேண்டும். வீட்டிலேயே பூஜை அறையில் இன்று மாலை விளக்கு ஏற்றி வைத்துவிடுங்கள்.
ஆறு மணிக்கு மேல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘ஓம் கால பைரவரே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்து பண வரவுக்கு ‘ஸ்வர்ணாகர்ஷண பைரவரை நினைத்து ‘ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை போற்றி’ என்று 27 முறை சொல்லுங்கள். பிறகு உங்களுடைய பிரார்த்தனையை பைரவரிடம் சொல்லுங்கள். எனக்கு இவ்வளவு பண தேவை இருக்கிறது.
அதற்கான வருமானத்தை பெருக்கி கொடு பைரவா என்று கேட்கவும். கையில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து கேளுங்கள். பணத்தை வர வைக்கக்கூடிய ஏஞ்சல் நம்பர் தான் அந்த எலுமிச்சம் பழத்தில் எழுதி வைத்திருக்கும் நம்பர். அதேபோல எலுமிச்சம் பழத்திற்கு, பிரபஞ்ச ஆற்றலை, நல்ல ஆற்றலை ஈராக்கக்கூடிய சக்தி இருக்கிறது.
நீங்கள் சொல்லக்கூடிய பிரார்த்தனையை தன்னகத்தை ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியும் எலுமிச்சம் பழத்திற்கு இருக்கிறது. வேண்டுதலை முடித்த பிறகு இந்த பழத்தை அப்படியே கொண்டு போய் உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். நிச்சயமாக செல்வ வளம் பெருக பைரவரின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இந்த வேண்டுதலை நீங்கள் கோவிலுக்கு சென்று செய்ய வேண்டும் என்றாலும் செய்யலாம். கையில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு, பைரவர் சன்னிதானத்திற்கு முன்பாக அமர்ந்து, மேலே சொன்ன பைரவரின் மந்திரத்தை சொல்லி உங்கள் வேண்டுதலை வையுங்கள் அவ்வளவுதான்.
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள், குறிப்பிட்ட தொகை தேவைப்படுகிறது. திருமணத்திற்கு, மருத்துவ செலவிற்காக, நிலம் வாங்குவதற்காக, வீடு கட்டுவதற்காக உதாரணத்திற்கு 5 லட்சம், 10 லட்சம் தேவை என்றால் இந்த தேதிக்குள் இந்த தொகை என் கைக்கு வர வேண்டும் என்று இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து வேண்டிக் கொண்டாலும், அவசர தேவையை பூர்த்தி செய்வதற்கு உண்டான பணம் ஏதாவது ரூபத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: திருமணம் நடக்க நாளைய தினம் முருகன் வழிபாடு
வங்கியில் லோன் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. அந்த லோன் சேங்ஷன் ஆக வேண்டும் என்றாலும் இதே போல வேண்டுதலை வைக்கலாம். நிச்சயம் அந்த வேண்டுதலை நிறைவேற்றி தர பைரவர் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.