இன்றைய தினம் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய். செவ்வாய் கிழமை என்றாலே அது பண பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். இந்த செவ்வாய் அம்பாளுக்கு உரிய செவ்வாயாக இருக்கிறது. காரணம் ஆடி மாதத்தில் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை இன்று. அம்பாளின் அருளும், முருகப்பெருமானின் அருளும் ஒன்று சேர்ந்து இருக்கக்கூடிய இன்றைய தினத்தில் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் நிச்சயம் இரட்டிப்பு பலனை கொடுக்கும்.
செவ்வாய் வெறும் வாய் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் அது கிடையாது. செவ்வாய் என்றால் அது வருவாயை கொடுக்கக் கூடியது. அதுதான் காலப்போக்கில் வெறும் வாய் ஆக மாறிவிட்டது. செவ்வாய் கிழமை என்றால் அது வருவாய் கொடுக்கக்கு உறிய கிழமை. பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கிழமை. இப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீகம் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த 11 செவ்வாய்க்கிழமைக்குள், உங்களுடைய கடன் சுமை எல்லாம் படிப்படியாக குறைவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம். சரி, அந்த பரிகாரத்தை எப்படி செய்வது.
கடன் தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவை ஒரே 1 வெற்றிலை, 7 கட்டி கல்கண்டு. வெற்றிலையின் மேல் 7 கட்டி கற்கண்டு வைத்து, இதை அப்படியே உங்களுடைய தலையை 9 முறை சுற்ற வேண்டும். ‘முருகா என் கடன் சுமை குறைய வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே இந்த இரண்டு பொருளையும் தலையை சுற்றிக் கொள்ளுங்கள். பின்பு இந்த 2 பொருட்களையும் உங்கள் வீட்டிற்கு வெளியில் கொண்டு போய் ஓரமாக வீதி ஓரத்தில் வைத்து விட வேண்டும்.
உங்களால் முடியும் என்றால் முச்சந்திரோடு, நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம், அந்த மாதிரி இடத்தில் இந்த வெற்றிலையோடு இருக்கும் கல்கண்டை வைப்பது நல்லது. இந்த இரண்டு பொருளை மக்கள் நடமாடும் பகுதியில் வைப்பதால், அடுத்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எந்த பாதிப்பும் வராது. இதை எறும்புகள் வந்து சாப்பிட்டுக் கொள்ளும்.
ஆனால் உங்கள் தலையை சுற்றி இந்த இரண்டு பொருளை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக வீட்டில் இருந்து வெளியே போட்டு விடுங்கள். செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை மாலை 6:00 மணிக்கு மேலாக, இரவு 12:00 மணிக்கு முன்பாக, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க புதன்கிழமை பிள்ளையார் வழிபாடு
இதே போல தொடர்ந்து 11 செவ்வாய்க்கிழமைகள் வெற்றிலையையும், கற்கண்டையும் 9 முறை உங்கள் தலையை சுற்றி போடும்போது, உங்கள் கடன் சுமை படிப்படியாக குறையும் என்பது நம்பிக்கை. வருமானம் படிப்படியாக உயரும் என்பது நம்பிக்கை. பரிகாரத்தை செய்யும் போது உங்கள் குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.