எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு உடனடியாக தீர்வு கொடுக்கக் கூடிய தெய்வம் என்றால் அது விநாயகர் தான். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு, சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யும் வேலையில் மனதிருப்தி இல்லை கை நிறைய வருமானம் இல்லை. இன்னும் சிறப்பான வேலை கிடைத்தால் நல்லது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
செய்யும் தொழிலில் விருப்பம் இல்லாமல் ரொம்பவும் மன கசப்போடு, தொழில் செய்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால், தொழிலில் ஆர்வம் ஏற்படும். மன நிம்மதியோடு திருப்தியோடு உங்களுடைய தொழிலை செய்ய தொடங்கி விடுவீர்கள். ஆக மொத்தம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க மாட்டீங்க. இஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பீர்கள். அதற்கு உண்டான பிள்ளையார் வழிபாடு தான் இது.
நல்ல வேலை கிடைக்க பிள்ளையார் வழிபாடு
புதன்கிழமை இந்த மாலையை விநாயகருக்கு கட்டிப் போட வேண்டும். கற்பூரவள்ளி இலை என்ற சொல்வார்கள் அல்லவா. இந்த இலை கடைகளில் விற்காது. நிறைய வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்ப்பார்கள், அல்லது தோட்டங்களில் அதுவே தானாக படர்ந்து வளர்ந்து இருக்கும். சலிக்கு கூட இந்த கற்பூரவள்ளி இலை சிறந்தது என்று சொல்லுவார்கள்.
கற்பூரவள்ளி செடியிலிருந்து 21 இலைகளை பறித்து தண்ணீரில் கழுவி ஒரு மஞ்சள் நிற நூலால் மாலையாக கட்டி விநாயகருக்கு போட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே சரியாகும் என்பது நம்பிக்கை. ஒரே ஒரு புதன் கிழமை இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் போதும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். இந்த மாலையைக் கட்டி அரச மரத்தடியில் உட்கார்ந்து இருக்கும் பிள்ளையாருக்கு கூட உங்கள் கையாலேயே கொண்டு போய் போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது. 21 செவ்வாழைப்பழங்களை வாங்கி அதை கொஞ்சம் தடிமனான கயிறால் மாலை போல கட்டி பிள்ளையாருக்கு செலுத்துவதன் மூலமும், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஆனால் இந்த செவ்வாழைப்பழத்தை நீங்கள் மாலையாக போட வேண்டும் என்றால் தொடர்ந்து 21 வாரம் புதன்கிழமைகளில், செவ்வாழை பழத்தை கொண்டு பிள்ளையாருக்கு மாலை போட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. அதுவே கற்பூரவள்ளி இலையில் மாலை போட்டால் அதில் சக்தி அதிகம். ஒரு வாரத்திலேயே உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். இந்த இரண்டு வழிபாடுகளில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பின்பற்றி பலன் பெறவும்.
விநாயகர் மிக மிக எளிமையானவர். தூய்மையான மனதோடு உண்மையான பக்தியோடு அவர் முன்பாக போய் நின்று மூன்று தோப்பு கரணம் போட்டு உங்கள் பிரச்சனைகளை சொல்லி வேண்டுதல் வைத்தாலே அதை நிறைவேற்றிக் கொடுப்பார். அதிலும் மேல் சொன்ன இந்த இரண்டு பரிகாரங்களை செய்து வேண்டுதல் வைத்தீர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
கேட்ட வரங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். அதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.