- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனக்குழப்பம் நீங்க எளிமையான பரிகாரம்

மனக்குழப்பம் நீங்க எளிமையான பரிகாரம்

- Advertisement -

ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்பதற்கு அவருடைய மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மனம் எந்த அளவிற்கு தெளிவாக ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கை சீரும் சிறப்புடன் இருக்கும் என்றும் மனதெளிவில்லாமல் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்றும் பலரும் அனுபவபூர்வமாக பார்த்தும் இருப்போம், கேட்டும் இருப்போம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனதில் இருக்கக்கூடிய குழப்பத்தை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மனக்குழப்பம் நீங்க எளிமையான பரிகாரம்

ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால் அவருடைய மனது தெளிவாக இருக்க வேண்டும். மனதில் 1008 எண்ணங்களை போட்டுக்கொண்டு இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்று குழம்பிக் கொண்டே இருந்தால், அதனால் மனக்குழப்பம் மட்டும் மிஞ்சுமே தவிர்த்து வேறு எதுவும் ஏற்படாது. இன்னும் சிலரோ முடிந்துபோன பிரச்சனைகளை நினைத்து இப்படி செய்திருந்தால் இப்படி ஆயிருந்திருக்கும் என்று முடிந்ததை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். இதுவும் மன குழப்பம் ஏற்படுவதற்குரிய காரணமாக திகழ்கிறது. எது நடந்தாலும் அது நன்மைக்காகவே நடந்தது, இனிமேல் நடக்க போறதும் நன்மைக்காகவே நடக்கும் என்ற ஒரு தெளிவான மனநிலையை பெற வேண்டும் என்றால் அதற்கு தெய்வ நம்பிக்கை என்பது பெரிதும் துணை புரிகிறது. மேலும் இந்த தெய்வ நம்பிக்கையோடு சேர்த்து நாம் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் நம்முடைய மனக்குழப்பத்தை நீக்கி தெளிவான மனநிலைக்கு நம்மை ஆளாக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை தோறும் நாம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு இரண்டு இலைகள் வேண்டும். ஒன்று துளசி, மற்றொன்று புதினா. துளசியிலும் புதினாவிலும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டையும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் பொழுது நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட புதினா, துளசி இலை இரண்டையும் திங்கட்கிழமை அன்று நாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது என்னுடைய மனது தெளிவடைந்து விட்டது. நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்ற நேர்மறையான எண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டு அல்லது உச்சரித்துக் கொண்டு குளிக்க வேண்டும். இப்படி திங்கட்கிழமை தோறும் நாம் செய்வதன் மூலம் நம்முடைய மனநிலை என்பது சீராகும்.

- Advertisement -

திங்கட்கிழமை என்பது சோமவாரம். அதாவது சந்திரனுக்குரிய நாளாக கருதப்படுகிறது. சந்திரன் என்பவர் மனோகாரவனாக கருதப்படுகிறார். நம்முடைய மனநிலையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் சந்திர பகவானே காரணமாக திகழ்வதால் அவருக்குரிய தினத்தில் நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். மனது தெளிவுபடும். அதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் வரலட்சுமி விரத பரிகாரம்

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு இலைகளை வைத்து இந்த எளிமையான ஒரு பரிகாரத்தை முழு மனதுடன் நேர்மறை ஆற்றலுடன் செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் மனக்குழப்பம் என்பது நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்