- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் வரலட்சுமி விரத பரிகாரம்

பண வரவை அதிகரிக்கும் வரலட்சுமி விரத பரிகாரம்

- Advertisement -

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களில் ஒன்றுதான் வரலட்சுமி விரதம். இது மகாலட்சுமி தாயாரை நினைத்து வீட்டில் பூஜை செய்யக்கூடிய ஒரு முறையாகும். இதை மூன்று நாட்கள் செய்வார்கள். வரலட்சுமி பூஜை செய்வதற்கு முதல் நாள் அம்மனை வீட்டிற்கு அழைப்பதும், வரலட்சுமி பூஜை அன்று மகாலட்சுமி தாயாருக்கு வழிபாடு செய்வதும், மூன்றாவது நாள் பூஜை பூர்த்தி செய்வது என்று மூன்று நாட்கள் நடைபெறும். இப்படி நடைபெறக்கூடிய இந்த வரலட்சுமி பூஜை அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய வாழ்வில் பணவரவை அதிகரிக்கும். அப்படிப்பட்ட பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை அதிகரிக்கும் வரலட்சுமி விரத பரிகாரம்

வரலட்சுமி விரதம் ஆனது ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் அதாவது வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் வழிபட்டு அம்மனை வீட்டிற்கு அழைக்க வேண்டும். வியாழக்கிழமை மாலை செய்ய இயலாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அம்மனை வீட்டிற்கு அழைக்கலாம்.

- Advertisement -

பூஜை செய்வதாக இருக்கும் பட்சத்தில் காலை 9 மணியிலிருந்து 10:20 மணிக்குள் பூஜை செய்யலாம் அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். கலசம் வைக்காமல் மகாலட்சுமி தாயாரின் படத்தை மட்டும் வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மகாலட்சுமி தாயாரின் படத்தை அலங்கரித்து வீட்டு வாசலில் இருந்து உள்ளே கொண்டு வந்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இப்படி பூஜை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக சிறிது வெட்டிவேர், வெள்ளை மொச்சை ஒரு கைப்பிடி அளவு, விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள் ஒன்று வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார வழிபாடு செய்துவிட்டு, “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி, ஓம் சுக்ர பகவானே போற்றி” என்று கூறியபடியே ஒரு மஞ்சள் நிற துணியை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் இந்த மூன்று பொருள்களையும் வைத்து மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு நம் வீட்டு நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

- Advertisement -

இப்படி கட்டுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை நீங்கும், மங்களங்கள் உண்டாகும், தொழில் சிறப்பாக நடைபெறும், வரவேண்டிய பணம் வந்து சேரும், பணம் எந்த வழியில் வருகிறது என்பதே தெரியாத அளவிற்கு பல வழிகளில் பணவரவு என்பது ஏற்படும். இந்த மூட்டையை வீட்டில் கட்டுவது போலவே தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் கட்டலாம் தொழிலில் லாபம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:குபேர அருள் கிடைக்க ஆடி கடைசி வியாழன் ஏற்ற வேண்டிய தீபம்

வரலட்சுமி பூஜை அன்று செய்யக்கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் நாமும் நம்முடைய வீட்டில் செய்து மகாலட்சுமி தாயாரின் அருளை பரி பூரணமான பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்